மூலமும் உரையும்205



திருக்கோவையார் 174 ஆம் செய்யுள்
காமமிக்க கழிபடர்கிளவி

     அஃதாவது: தலைவனைப் பிரிந்துரைகின்ற தலைவி பெரிதும் வருந்தித் தன் மருங்குள்ள பொழில் முதலியவற்றை விளித்து நீவிர் இங்ஙனம் வருந்தும் என்னை, ‘உனக்குற்ற துயர் யாது என்று ஒரு முறையேனும் வினவுகின்றிலீர்!; உங்கள் அன்பு இதுதானோ என்று அவற்றொடு புலந்து கூறுதல் என்பதாம். அதற்குச் செய்யுள்:-

மாதுற்ற மேனி வரையுற்ற
     வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி
     காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் னீர்மன்னு
     மீர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது
     வோநன்மை செப்புமினே.

தாமமிக்க தாழ்குழலோழை காமமிக்க கழிபடர் கிளவி

     (இ-ள்) மாது உற்ற மேனி-ஒருபால் உமையம்மையார் பொருந்திய திருமேனியையும்; வரை உற்ற வில்லி-மலையாகிய வலிமை மிக்க வில்லினையும் உடைய கூத்தப் பெருமானுடைய; தில்லைநகர் சூழ்-தில்லைமாநகரைச் சூழ்ந்தமைந்த; போது உற்ற பூம்பொழில்காள்-நாளரும்புகள் பொருந்திய மலர்களோடு கூடிய பொழில்களே; கழிகாள்-அப்பொழிலைச் சூழ்ந்துள்ள கழிகளே; எழில் புள்ளினங்காள்-அக்கழிகளில் பயிலும் அழகிய பறவைகளே; ஏது உற்று அழுதி என்னீர்-நும்மோடு பெரிதும் பழகிய யான் உற்ற வருத்தம் கண்டு வைத்தும் என்னை நோக்கி நீ எவ்வருத்தம் எய்தி இவ்வாறு அழிகின்றாய் என்று ஒரு முறையேனும் வினவுகின்றிலீர்; ஈர்ந்துறைவார்கு-குளிர்ந்த கடற்றுறையினையுடைய தலைவருக்கு; இவள் தீது உற்றது என்னுக்கு என்னீர்-இவள் துன்பமுற்றது எதன்பொருட்டோ என்று நும்முளும் உசாவுகின்றில்லீர்; இதுவோ நன்மை-இதுவோ எங்களிடத்து நீயிர் கொண்ட அன்புடைமை; செப்புமின்-சொல்லுமின் என்றவாறு.

     (வி-ம்.) மாதுற்றமேனி என்பது அன்மொழித் தொகையாய் மேனியை உடையான் என்னும் பொருள்பட நின்றது எனினும் அமையும். இனி வரையுற்ற வில்லி என்பதற்கு வரைத்தன்மையைப் பொருந்