206கல்லாடம்[செய்யுள்23]



திய வில்லையுடையான் எனினும் அமையும். போது-பேரரும்பு. “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்” என்புழியும் அஃகப் பொருட்டாதல் அறிக. மன்னும் என்பதூஉம் இவளோ என்பதன்கண் ஓகாரமும் அசைநிலை. மன்னும் திதுற்றதெனக் கூட்டி மிகுதிக்கண் வந்தென்பாரும் உளர் இதுவோ நன்மை என்பதற்கு தில்லையைச் சூழ்ந்த விடத்துள்ளீராயிருந்தும் உமக்குண்டாகிய நற்பண்பு இதுதானோ? எனினும் அமையும். அழுதி என்றும் பாடம். மெயப்ப்பாடு. அழுகை பயங் இவற்றைத் தலைவன் கேட்பின் வரைவானதலும் தோழி கேட்பின் வரைவுகடாவுவாளாதலும் யாரும் கேட்பாரில்லையாயின் அயர்வுயிர்த்துத் தானே ஆற்றுதலும் ஆம்.

     இதன்கண் தலைவி பொழில் முதலியவற்றை விளித்து அவை கேட்பன போலவும் உணர்வுடையன போலவும் கூறுதல் வழுவாயினும் அமையும் என்பது.

நோயு மின்பமு மிருவகை நிலையிற்
காமங் கண்ணிய மரபிடை தெரிய
வெட்டன் பகுதியும் விளங்க வொட்டிய
வுறுப்புடை யதுபோ லுணர்வுடை யதுபோன்
மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்துஞ்
சொல்லா மரபினவற்றொடு கெழீஇச்
செய்யா மரபிற் றெழிற்படுத் தடக்கியு
மரவர் ருறுபிணி தமபோற் சேர்த்தியு
மறிவும் புலனும் வேறுபட நிறீஇ
யிருபெயர் மூன்று முரிய வாக
உவம வாயிற் படுத்தலு முவமமோ
டொன்றிடத் திருவர்க்கு முரியபாற்கிளவி”
                           (தொல். பொருளியல். சூ. 2.)

என்னும் நூற்பாவான் உணர்க.

 
 

செய்யுள் 23

நேரிசையாசிரியப்பா

 
   
5
 
வானவர்க் கிறைவ னிலங்கிடைக் கொண்டு
திருவுட னிறைவிழி யாயிரத் திரளு
மிமையாது விழித்த தோற்றம் போலக்
கஞ்சக் கொள்ளை யிடையறை மலர்ந்து
மணஞ்சூழ் கிடந்த நீள்கருங் கழியே
  கருங்கழி கொடுக்கும் வெள்ளிற வருந்தக்
கைபார்த் திருக்கு மடப்பெடைக் குருகே
பேடைக்குரு கணங்கின் விடுத்தவெண் சினையொடு
காவலடை கிடக்கும் கைதையம் பொழிலே