216கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 15 ஆம் செய்யுள்
இடமணித்துக்கூறி வற்புறுத்தல்

     அஃதாவது: இயற்கைப் புணர்ச்சியின்பின் தம் மொழுக்கத்தினைப் பிறரறியாமைப் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல நினைபவன் தான் பிரியின் இவள் ஆற்றாள் என அஞ்சி அவளைத் தேற்றிப் பிரிந்து போதற் பொருட்டு எம்மூர் நும்மூர்க்கு மிகவும் அண்மையில் உளது. ஆதலால் யான் சிறிது பொழுதில் மீண்டும் வந்து காணுதல்கூடும் வருந்தற்க! என்பான் தன் ஊர் அணித்து என்று கூறி வபுறுத்துதல் என்பதாம். அதற்குச் செய்யுள்.

வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை
     யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண் ரிளங்கொடி
     யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள
     பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக
     மேய்க்குங் கனங்குழையே.

மடவரலை வற்புறுத்தி இடமணித்தென் றவனியம்பியது.

     (இ-ள்) வரும் குன்றம் ஒன்று உரித்தோன்-இயங்கும் மலைபோன்ற ஒரு யானையை உரித்துப் போர்த்த; தில்லை அம்பலவன்-தில்லைச் திருச்சிற்றம்பல வாணனாகிய சிவபெருமானுடைய; மலயத்து இருங்குன்ற வாணர் இளங்கொடியே-பொதியின் மலையிடத்துக் குன்றங்களுள் வைத்துப் பெரிய குன்றின்கண் வாழும் குறவர் மகளாகிய இளங்கொடி போல்வாய்; இடர் எய்தல்-யான் நின்னைப் பிர்வேன் என்று வருந்த வேண்டா; கனங்குழையே-கனவிய குழையினையுடையோய்; எம் ஊர் பருகுன்றம் மாளிகை நுண் களபத்து ஒளி பாய-எம்மூரிடத்துள்ள பெரிய மலைகளை யொத்த மாளிகைகளின் நுண்ணியதாகிய சர்ந்தினது ஒள் பரந்து; நும் ஊர் கரு குன்றம் வெள் நிறம் கஞ்சுகம் ஏய்க்கும்-நுங்கள் ஊரின்கண் உளதாகிய கரிய மலை வெள்ளை நிறத்தையுடைய சட்டை இட்டது போலத் தோன்றும். ஆதலால் ஆற்றியிருந்திடுக! என்பதாம்.

     (வி-ம்.) வருங்குன்றம்-யானை. இயங்கும் மலையை ஒத்தது என்பது கருத்து. மலயம்-பொதியமலை. குன்றம் என்றது பக்கமலைகளை. வாணர்-வாழ்வோர். எம்மூர் நும்மூர் என்பன. அவ்வவ்வூரில் வாழும் ஏனைய மக்களையும் அகப்படுத்திக் கூறியபடியாம். வற்புறுத்து