மூலமும் உரையும்217



தற் பொருட்டு மீண்டும் கனங்குழையே என்று விளித்தான். கருங்குன்ற வெண்ணிறம் என்றும் பாடம். இதற்குக் களபத்து ஒளிபரப்ப அவ்வொளி கருங் குன்றத்திற்கிட்ட வெண்ணிறக் கஞ்சுகத்தோடு ஒக்கும் என்று பொருள் கூறுக. இவ்வாறு தலைவன் தன்னூர் பருங்குன்ற மாளிகையை யுடையதென்றும் தலைவியின் ஊர் குன்றத்தையே உடையது என்றும் கூறியதனால் தலைமகன் மிக்கோனாதல் வேண்டும். ஆகவே ஒப்பு எங்ஙனம் பொருந்தும் எனின் :மிக்கோனாயினும் கடிவரை இன்றே” என்பதோத்தாகலின் பொருந்தும் என்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைவியை ஆற்றி இருக்கச் செய்தல்.

 
 

செய்யுள் 24

நேரிசையாசிரியப்பா

 
   
5
  பொருப்புவளன் வேண்டி மழைக்கண் டிறப்பக்
குருபெயர்க் குன்றத் துடல்பக வெறிந்த
நெடுவேற் கடவுண் மயிற்கொடி முன்றிற்
பெருங்கிளை கூண்டு வெட்சிமலர் பரப்பி
யிறானற வளாய செந்தினை வெள்ளிடி
10
  தேக்கிலை விரித்து நாற்றிசை வைத்து
மனவணி முதியோள் வரையணங் கயர்ந்து
மூன்று காலமுந் தோன்றக் கூற
வேலன் சுழன்று குறுமறி யறுப்பக்
கருவி நுனிகொ ணெறியிலை யீந்தின்
15
  முற்றிய பெருநற வெண்ணுடன் குடித்து
நெட்டிலை யரம்பைக் குறுங்காய் மானு
முளியந் தறித்த கணைகொள்வாய்த் திரிக
லோப்புடைத் தாய வட்டவாய்த் தொண்டகங்
கோறலை பனிப்ப வான்விடு பெருங்குரல்
20
  வீயாது துவைக்குங் கடன்மலை நாடர்
வருந்தியீன் றெடுத்த செந்துரு மடமக
ளொருவுக வுள்ளத்துப் வெருகிய நடுக்க
மெம்மூர் சேணி னும்மூர்க் குன்றமும்
பெருந்தவர் குழுவு மருங்கதி யிருப்பும்
  பொதியமுங் களிப்ப விரிதரு தென்றலுங்
கனைகடல் குடித்த முனிவனுந் தமிழு
மேருவு மூவர்க் கோதிய புரமு
முலகமீன் றளித்த வுமையுமா வறனுந்