திருக்கோவையார் செய்யுள் 99
நீயே கூறென்று மறுத்தல்
அஃதாவது:
இயற்கைப் புணர்ச்சிக்குப்பின் இடந்தலைப் பாட்டின்கண் தலைவியைக் கண்டு அவளோடு
அளவளாவி வந்த தலைவன், அவ்வொழுக்கமமையாமையின் அவள் தோழியை வாயிலாகப் பெற்றுக்
கூடக் கருதி அத்தோழியை மதியுடம்படுவித்தவன், அவளைக் குறை இரந்து நீ சென்று என்
குறையைத் தலைவியின்பாற் கூறி அவளை என்னோடு கூட்டுவிப்பாயாக! என இரவாநிற்ப. அதுகேட்ட
தோழி யான் குற்றேவல் மகளாகலின் அவள்பால் இதனைத் துணிந்துகூற அஞ்சுவேன்; ஆதலின்
நீயே சென்று நின் குறையை அவள்பால் கூறுக! என்று தான் உடம்படாது மறுத்துக்கூறுதல் என்பதாம்.
அதற்குச் செய்யுள்:-
அந்தியின் வாயெழி
லம்பலத்
தெம்பர னம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
மொழிசென்றம் மொய்குழற்கே.
|
அஞ்சுதும் பெரும பஞ்சின் மெல்லடியைக் கூறுவ நீயே கூறுகென்றது.
(இ-ள்)
அந்தியின்வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம்பொன் வெற்பில்-அந்திமலைப் பொழுதின்கண்
தோன்றும் செக்கர் வானத்தின் அழகையுடையவனாகிய தில்லைச் சிற்றம்பலத்தின்கண்
கூத்தாடுபவனாகிய எம்முடைய இறைவனுடைய அழகிய பொன்னையுடைய இம்மலையின்கண்; பந்தியின்
வாய் பைந்தேனொடும் பலவு இன்சுளை-தமது குரங்கு நிஐயின்கண் புதிய தேனோடு பலாவினது
இனிய சுளையை; கடுவன் மந்தியின் வாய்க்கொடுத்து ஓம்பும் சிலம்ப-ஆண்குரங்கு தன் காதலியாகிய
மந்தியின் வாயில் ஊட்டி அதனைப் பாதுகாத்தற்கு இடனான மலையினையுடையோய்; மனம் கனிய
முந்தி இன் வாய்மொழி அம்மொய் குழற்கு நீயே சென்று மொழி-எம்பெருமாட்டியின் நெஞ்சம்
நெகிழும்படி அவள் முற்பட்டு இவ்வினிய வாய்மொழிகளை அந்தச் செறிந்த கூந்தலையுடையாளுக்கு
நீயே சென்று சொல்லுவாயாக; என்பதாம்.
(வி-ம்.)
அந்தியின்வாய் எழில் என்றது செக்கர் வானத்தின் அழகினை. எழில்-அழகு. எல்லாப்
பொருளையும் கடந்தானாயினும் எமக்கு
|