|
|
செய்யுள்
25
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
வேற்றுப்
பிடிபுணர்ந்து தீராப் புலவி
சுற்றமொடு தீர்க்க வுய்த்த காதலிற்
கருங்கைவெண் கோட்டுச் சிறுகட் பெருங்களி
றுளத்துநின் றளிக்குந் திருத்தகு மருநூல்
பள்ளிக் கனக்கர் பாற்பட் டாங்குக் |
10
|
|
குறிஞ்சிப்
பெருந்தே னிறாலொடு சிதைத்து
மென்னடைப் பிடிக்குக் கைப்பிடித் துதவி
யடிக்கடி வணங்குஞ் சார னாட
வந்தன ரிருக்கை யகல்வோர் சூழ்ந்தென
நன்னயங் கிடந்த பொன்னகர் மூடிப் |
15
|
|
புலைசெய்
துடன்று நிலைநிலை தேய்க்குந்
தள்ளா மெய்ம்பி னுள்ளுடைந் தொருகால்
வேதியன் முதலா வருமரு மரசனும்
போதுது யிரப்பப் புணரா மயக்க
நாரண னடித்த வெழுவாய்த் தருக்கத் |
20
|
|
தறிவுநிலை
போகி யருச்சனை விடுத்த
வெள்ளமுர ணரக்கர் கள்மதின் மூன்று
மடுக்குநிலை சுமந்த வலிதடப் பொன்மலை
கடுமுரண் குடிக்கு நெடுவிற் கூட்டி
யாயிரந் தீவா யரவுநாண் கொளுவி |
|
|
மாதவ
னங்கி வளிகுதை யெழுநுனை
செஞ்சரம் பேரரு ளரக்கன் மதியாகத்
தேர்வரை வையை மாகத் திருத்தச் |