மண்ணுளே சிலவி
யாதி மருத்துவன் அருத்தி யோடும்
திண்ணமா யறுத்துக் கீறித் திர்த்திடுஞ் சிலநோ யெல்லாம்
கண்ணிய கட்டி பாலும் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன்
அண்ணலும் இன்ப துன்பம் அருத்தியே வினைய றுப்பான்
(சித்தியார்
சுபக்கம். 125) |
எனவரும் சித்தியாரானும்
உணர்க. ஏங்கும்-ஒலிக்கும். ஏர்-அழகு. மேகத்திற் புதைந்து இருள் தூங்கும் புனை இறும்பு
என்க. புனையிறும்பு-இயற்கையாலன்றி மக்களால் வளர்க்கப்படும் செயற்கைக்காடு. இதனைச்
செய்காடு என்றும் கூறுவர். மேகம் வந்து பொருந்தின வென்றதனால், தன்னூருக்குப் போதலருமை
கூறுவான் போன்று இரவுக்குறி மாட்சிமைப்பாடு மென்றானாம். இருடூங்கும் புனையிறும்பு என்றதனால்,
யாவருங் காணாரகலி னாண்டுவந்து நிற்கின்றே னென்றானாம். மாலை விருந்தினரை மாற்றுதலறனன்றென்பது
தோன்ற பொருந்தின மேகமென்க. அருவியேர் பெற மேகம் பொருந்தினவூர் நின்னூராகலான்
என்னினைப் பற்று யானுமேர் பெற நின்னை அவ்ந்து சேர்தேனென்பது போதரும். மெய்ப்பாடு-பெருமிதம்.
பயன்-இரவுக்குறி நேர்வித்தல்.
|
|
செய்யுள்
26
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
வள்ளியோ
ரீதல் வரையாது போல
வெண்டிசைக் கருவிருந் தினமழை கான்றது
வெண்ணகைக் கருங்குழற் செந்தளிர்ச் சீறடி
மங்கைய ருளமெனக் கங்குலம் பரந்து
தெய்வங் கருதாப் பொய்யினர்க் குரைத்த |
10
|
|
நல்வழி
மானப் புல்வழி புரண்டது
கால முடியக் கணக்கின் படியே
மறலி விடுக்க வந்த தூதுவ
ருயிர்தொறும் வளைந்தென வுயிர்சுமந் துழலும்
புகர்மலை யியங்கா வகையரி சூழ்ந்தன |
15
|
|
வெள்ளுடற்
பேழ்வாய்த் தழல்விழி மடங்க
லுரிவை மூடிக் கரித்தோல் விரித்துப்
புள்ளி பரந்த வள்ளுகிர்த் தரக்கி
னதள்பிறக் கிட்டுக் குதிபாய் நவ்வியின்
சரும முடுத்துக் கரும்பாம்பு கட்டி |
|
|
முன்புகு
விதியி னென்புகுரல் பூண்டு
கருமா வெயிறு திருமார்பு தூக்கி |
|