மூலமும் உரையும்241



திருக்கோவையார் 221 ஆம் செய்யுள்
நகரணிமை கூறல்

     அஃதாவது: அலர் எழுதல் இற்செறித்தல் பிறர் வரைவு நேர்தல் முதலிய இடையூறுகள் காரணமாகத் தலைவன் தலைவியை அவள் தமரறியாதபடி தன்னுடன் அழைத்துக்கொண்டு செவ்விய பாலை வழியில் செல்லுங்கால் அவ்வழியில் எதிர்வருவோர் அவரைக்கண்டு இரங்கி இனிச் சிறிது தொலை சென்று அக்குனத்தைக் கடந்தால் நுங்கள் நகர் வீலங்கித்தோன்றும். அதுகாறும் விரைந்து செல்வீராக என்று அவர் நகரணிமை கூறுதல் என்பதாம். அதற்குச் செய்யுள்:

மின்றங் கிடையொடு நீவியன்
     றில்லைசிற் றம்பலவர்
குன்றங் கடந்துசென் றானின்று
     தோன்றுங் குரூஉக்கமலந்
துன்றங் கிடக்குந் துறைதுறை
     வள்ளைவெள் ளைநகையார்
சென்றங் கடைதட மும்புடை
     சூழ்தரு சேணேகரே.

வண்டமர் குழலியொடு கண்டவ ருரைத்தது.

     (இ-ள்) மின்தங்கு இடையொடு-மின்னலை யொத்த இடையையுடைய இந்நங்கையோடே; நீவியன் தில்லைச் சிற்றம்பலவர் குன்றங் கடந்து சென்றால்-நீ அதோ எதிரே தோன்றுகின்ற தில்லையின்கண் அமைந்த திருச்சிற்றம்பலத்தையுடைய நம்பெருமானுடைய மலையைக் கடந்து அப்பால் சிறிது நெறியைச் சென்றால்; குரூஉக்கமலம் துன்று அம் கிடங்கும்-சிறந்த நிறத்தையுடைய தாமரை மலே நெருங்கிய அழகிய அகழியும்; வள்ளை வெள்ளை நகையார் துறைதுறை சென்று அங்கு அடை தடமும்-வள்ளைப்பாடலைப் பாடும் வெள்ளிய பற்களையுடைய மகளிர் துறைதொறும் துறைதொறும் சென்று அவ்விடத்துச் சேரும் பொய்கைகளும்; புடைசூழ்ய்ஜரு சேண்நகர்-பக்கத்திலே சூழ்ந்துள்ள அத்தில்லையாகிய உயர்ந்த நகரம்; நின்று தோன்றும்-நுமக்கு இடையறாது கண்கூடாகத் தோன்றாநிற்கும். ஆதலால் அதுகாறும் விரைந்து செல்வாயாக என்பதாம்.

     (வி-ம்.) மின்றங்கிடை: அன்மொழி. நின்று தோன்றுதல்-இடையறவுபடாமல் காணப்படுதல். குரூஉ-நிறம். கமலம்-தாமரி. துன்று அம் கிடங்கு என்க. கிடங்கு-அகழி. வள்ளை-வள்ளைப்பாட்டு. நகை-பல். தடம்-நீர்நிலை. சேண்-உயர்ந்த. மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-இடமணித்தென்றல். கல்.-16