|
|
செய்யுள்
27
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
புயற்கார்ப் பாசடை யெண்படப் படர்ந்த
வெள்ளப் பெருநதி கொள்ளைமுகம் வைத்து
நீடநிறை பாயும் வான வாவிக்கு
ளொருசெந் தாமரை நடுமலர்ந் தென்ன
மூவடி வழக்கிற் கோரடி மண்கொண் |
10
|
|
டொருதாள்
விண்ணத் திருமைபெற நீட்டிய
கருங்கடல் வண்ணன் செங்க ருங்கரத்
தோன்றா லிருமலை யன்றேந் தியதென
வுந்தியொழுக் கேந்திய வனமுலை யாட்டியும்
வரைபொரு மருமத் தொருதிற னீயு |
15
|
|
முழைவா
யரக்கர் பாடுகிடந் தொத்த
நிறைகிடைப் பொற்றை வரைகிடந் திறந்தா
லெரிதழற் குஞ்சிப் பொறுவிழிப் பிறழெயிற்
றிருளுட லந்தகன் மருள்கொள வுதைத்த
மூவாத் திருப்பதத் தொருதனிப் பெருமா |
20
|
|
னெண்ணிற்
பெறாத வண்டப் பெருந்திர
ளடைவீன் றளித்த பிறைநுதற் கன்னியொடு
மளவாக் கற்ப மளிவைத்து நிலைஇய
பாசடை நெடுங்காடு காணிகோ ணீர்நாய்
வானவி னிறத்த நெட்டுடல் வாளைப் |
25
|
|
பேழ்வா
யொளிப்ப வேட்டுவப் பெயரளி
யிடையுழற் நுசுப்பிற் குரவைவாய்க் கடைசியர்
களைகடுந் தொழிவிடுத் துழவுசெறு மண்டப்
பண்கா லுழவர் பகடுபிடர் பூண்ட
முடப்புது நாஞ்சி லள்ளல்புக நிறுத்திச் |
30
|
|
சூடுநிலை
யுயர்த்துங் கடுங்குலை யேறப்
பைங்குவளை துய்க்குஞ் செங்கட் கவரி
நாகொடு வெருண்டு கழைக்கரும் புழக்க
வமுதவாய் மொழிச்சியர் நச்சுவிழி போல
நெடுங்குழை கிழிப்பக் கடுங்கயல் பாயுந் |
|
|
தண்ணம்
பழனஞ் சூழ்ந்த
கண்ணிவர் கூடற் பெருவலம் பதியே. |