248கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 107 ஆம் செய்யுள்
அறியாள்போன்று நினைவுகேட்டல்

     அஃதாவது: இயற்கைப் புணர்ச்சிக்குப்பின் தோழியை மதியுடம்படுக்கும் தலைவன் தலைவிக்கு வழங்குதற்குத் தழை கொணர்ந்து ‘இதை ஏற்றுக்கொள்வாயாக!’ எனத் தோழியை வேண்டாநிற்ப; அதுகேட்ட தோழி அத்தழையை இவன் வருந்தாதிருக்கும் பொருட்டு ஏற்றுக்கொள்வேன் எனத் தன்னுட் கருதி ‘ஐய! என்னுடைய தோழியர் பலர்; அவருள் யாருக்கு நீ இத்தழையை கொணர்ந்தனை எனத் தான் அறியாதாள்போல அவன் நினைவினை வினவியது என்பதாம். அதற்குச் செய்யுள்:

விண்ணிறந் தார்நிலம் விண்டவ
     ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத்
     தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச்
     சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண
     தோமன்ன நின்னருளே.

வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை வெறியர் கோதை யறியே னென்றது.

     (இ-ள்) விண் இறந்தார் நிலம் விண்டவர் என்று மிக்கார் இருவர் கண் இறந்தார்-தம்முடைய முடியைக் காண்டற்கு அவாவி வானில் பறந்து கடந்த நான்மிகனும் அடியைக் காண்டற்கு அவாவி நிலத்தை அகழ்ந்து சென திருமாலும் என்னும் தேவர்களின் மிக்க இவ்விரண்டு தேவர்களுக்கும் கண்ணைக் கடந்து அப்பாலானவராயிருந்தும் மெய்யடியார் பொருட்டு; தில்லை அம்பலத்தார்-எளிவந்து திருத்தில்லைச்சிற்றம்பலத்தின்கண் இன்பக்கூத்தியற்றுகின்ற சிவபெருமானுடைய; கழுக்குன்றில்-திருக்கழுக்குன்றத்தின்கண்ணே; தண் நஏஉந்தாது இவர் சந்தனச்சோலை நின்று பந்து ஆடுகின்றார் எண் இறந்தார்-குளிர்ந்த நறிய பூந்துகள் பரவிய சந்தனச்சொலையிடத்தே நின்று பந்தாடுகின்ற என் தோழிமார் சாலப் பலராவர்; மன்ன-வேந்தனே; நின் அருள் அவர் யார் கண்ணதோ-நின்னுடைய அருள் அவருள் வைத்து எத்தொழியின் பாலதோ யான் அறிகின்றிலேன்; கூறுவாயாக! என்பதாம்.

     (வி-ம்.) விண்ணிறந்தார் என்றது இறைவனுடைய திருமுடியை யான் காண்குவன் என்று அன்னமாய் விண்ணிற்பறந்த நான்முகனை