மூலமும் உரையும்255



திருக்கோவையார் 232 ஆம் செய்யுள்
சுடரோடிரடத்தல்

     அஃதாவது: மகட்போக்கிய தாய், ‘பெற்ற யானும் தன் கிளியும் வருந்தும்படி எம்மைத்துறந்து கற்புக்கடம் பூண்டு வெய்ய பாலைநிலத்திலே சென்ற என் மகளுடைய முகத்தை ஞாயிற்றுக் கடவுளே! நின் கதிர்களால் வாட்டாமல் தாமரைமலரை அலர்த்துமாறுபோலே மகிழ்ந்து அலரச்செய்வாயாக’ என்று ஞாயிற்றைநோக்கி இரந்து கூறியது என்பதாம். அதற்குச் செய்யுள்-

பெற்றே னொடுங்கிள்ளை வாட
     முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேன் மொழியழற் கானடந்
     தண்முகம் நானணுகப்
பெற்றேன் பிறவி பெறாமற்செய்
     தோன்றில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்ந்திரந்
     தேன்சுடர் வானவனே.

வெஞ்சுரந் தணிக்கெனச் செஞ்சுட ரவற்கு வேயமர் தோளி தாயர் பராயது.

     (இ-ள்) சுடர்வானவனே-ஒளிப்பிழம்பாகிய ஞாயிற்றுக் கடவுளே; பெற்றேனொடும் கிள்ளைவாட-தன்னை ஈன்றவளாகிய யானும் தன்னால் வளர்க்கப்பட்ட இக்கிளியும் பிரிவாற்றாமல் வருந்தும்படி எம்மைத் துரந்து; முதுக்குறை பெற்றிமிக்கு-தன் அறிவு முதிர்ந்த பண்பு மிகுந்தமையாலே; நல் தேன்மொழி-கேட்பொர்க்கு நல்ல தேன்போல இனிக்கும் மொழியினையுடைய என்மகள்; அழல்கான் நடந்தாள் முகம்-எம்மினும் சிறந்தாளை வழிபட்டு நெருப்பினையுடைய பாலைநிலத்திலே நடந்தவளுடைய முகத்தை; அணுகப்பெற்றேன் நான்-ஒருவாற்றால் தன்னை அணுகப்பெற்றேனாகிய அடிச்சியேனும்; பிறவி பெறாமற் செய்தோன் தில்லை-பின்பு பிறவியைப் பெறாத வண்ணம் செய்த சிவபெருமானுடைய திருத்தில்லையின்கண் மலர்ந்துள்ள; தேன்பிறங்கு மல்தேன் மலரின் மலர்த்து-தே மிக்க வளவிய வண்டையுடைய தாமரைமலரை மலர்த்துவதுபோல மலர்த்துவாயாக; இரந்தேன்-நின்கதிர்களால் வாட்டாதொழிக! யான் நின்னை இவ்வரம் இரந்தேன். அருளுக! என்பதாம்.

     (வி-ம்.) பெற்றேன் என்பது யிறுளைந்து பெற்று வளர்த்தேன் என்பதுபடநின்றது. கிள்ளை என்பது தன்னாற் பேணி வளர்க்கப்