256கல்லாடம்[செய்யுள்29]



பட்ட கிள்ளை என்பதுபட நின்றது. முதுக்குறை பெற்றமிக்கு-அறிவிந்தன்மை மிக்கு, அஃதாவது தாயும் தந்தையுமாகிய எம்மினுங்காட்டில் தான் கற்புக்கடம் பூண்ட கணவனே தனக்குச் சிறந்தான் என்றறியுமளவு அவள் அறிவு முதிர்ந்துவிட்டது என்பது கருத்து. இதனால் ஞாயிறு அவளை வருந்தவொண்ணாமைக்கும் குறிப்பாக ஓரேதுக் காட்டியபடியாம். முதுக்குறை-அறிவு. தேன்மொழி-இரண்டனுள் முன்னது தேன்; பின்னது வண்டு. ம்மலர்த்து எனவே வாட்டாதொழி என்றிரந்தாளுமாயிற்று. மெய்ப்பாடு-அழுகை. பயன்-ஆற்றாமை நீக்குதல்.

 
 

செய்யுள் 29

நேரிசையாசிரியப்பா

 
   
5
  ஈன்றவென் னுளமுந் தோன்றமொழி பயின்ற
வளைவாய்க் கிள்ளையும் வரிப்புனை பந்தும்
பூவையுங் கோங்கின் பொன்னலர் சூட்டிய
பாவையு மானுந் தெருள்பவ ரூரு
நெடுந்திசை நடக்கும் பொருணிறை கலத்தினப்
10
  பெருவளி மலக்கச் செயன்மறு மறந்தாங்குச்
சேர மறுக முதுக்குறை வுறுத்தி
யெரிதெறுங் கொடுஞ்சுரத் திறந்தன ளாக
நதிக்கடத் தறுகட் புகர்கொலை மறுத்த
கல்லிப மதனைக் கரும்புகொள வைத்த
15
  வாலவா யமர்ந்த நீலநிறை கண்டன்
மறிதிரைப் பரவைப் புடைவயிறு குழம்பத்
துலக்குமலை யொருநாட் கலக்குவ போல
வுழுவையுகி ருழுக்கு மேந்துகோட் டும்ப
லுரிவை மூடி யொளியினை மறைத்துத்
20
  தரைபடு மறுக்கந் தடைந்தன போல
விண்ணுற விரித்த கருமுகிற் படாங்கொடு
மண்ணக முருகக் கனற்றுமழன் மேனியை
யெடுத்து மூடி யெறிதிரைப் பழனத்துப்
பனிச்சிறுமை கொள்ளா முள்ளரை முளரி
  வண்டொடு மலர்ந்த வண்ணம் போலக்
கண்ணு மனமுங் களிவர மலர்த்துதி
மலர்தலை யுலகத் திருளெறி விளக்கு
மன்னுயிர் விழிக்கக் கண்ணிய கண்ணு