திருக்கோவையார் 287 ஆம் செய்யுள்
இன்னலெய்தல்
அஃதாவது:
செவிலித்தாய் தலைவியின் வேறுபாடு கண்டு இஃது எதனாலுற்றது என்று அறிதற்பொருட்டு வேலனை
அழைத்தாளாக. அதுகேட்ட தலைவி இனி எவ்வாற்றானும் நமக்கு உயிர்வாழ வழி இல்லை எனத்
தன்னுள்ளே கூறித் துன்புறாநிற்றல் என்பதாம். அதற்குச் செய்யுள்-
அயர்ந்தும் வெறிமறி
யாவி
செகுத்தும் விளர்ப்பயலார்
பெயர்ந்து மொழியா விடினென்னை
பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்து முணரான
தம்பல முன்னலரிற்
றுயர்ந்தும் பிறிதி னொழியினென்
னாதுந் துறைவனுக்கே. |
(இ-ள்)
வெறி அயர்ந்தும் மறி ஆவி செகுத்தும் பெயர்ந்தும் விளர்ப்பு ஒழியாவிடின்-இவ்வேலன்
வெறியாடலை விரும்பி ஆடியும் யாட்டின் உயிரை அழித்தும் பின்னும் இந்நிற வேறுபாடு என்பால்
ஒழியாதாயின்; அயலார் பேசுவ என்னை-என் திறத்தாலே அயலார் பேசும்மொழிகள் எத்தகையவாம்;
பிறிதின் ஒழியின்-அன்றி வெறியாடலாகிய இவ்வேறு செயலால் ஒரோவழி இவ்விளர்ப்பு
ஒழிந்துவிடுமாயின்; இருவர் பேர்ந்து உயர்ந்தும் பணிந்தும் உணராது அம்பலம் உன்னலரின்
துயர்ந்தும்-யானே தலைவன் யானே தலைவன் என்று செருக்கினாலே தம்முள் மாறுபட்ட நான்முகனும்
திருமாலுமாகிய இருவரும் அந்நிலைமையினின்றும் நீங்கித் தீப்பிழம்பாகிய தன்னுடைய
முடியையும் அடியையும் காணமுயன்று வானத்தின்மேல் பறந்து உயர்ந்தும் நிலத்தை அகழ்ந்தும்
அதனூடே புகுந்து தாழ்ந்தும் காணப்படாதவனாகிய சிவபெருமானுடைய திருச்சிற்றம்பலத்தை
நினையாதவரைப்போன்று பெரிதும் வருந்தியும்; துறைவனுக்கு என் ஆதும்-எம்பெருமானுக்கு எத்திறத்தேம்
ஆகுவேம்; எனவே இருவழியிலும் யாம் இனி உயிர்வாழ்தல் அரிது என்பதாம்.
(வி-ம்.)
வெறியயர்ந்தும் என மாறுக. மறி-யாடு. வெறியாடல் போன்று மறி ஆவி செகுத்தலும் பேதமை
என்பாள் மறி
|