ஆவி செகுத்தும் என்றாள். விளர்ப்பு-தலைவன் தன்னைப் பிரிந்தமையாலுண்டான நிறவேறுபாடு. வெறியாடிய பின்னர் இவ்விளர்ப்புத் தீராதாயின் அயலார் இக்குறை தெய்வக்குறை அன்று இவளுடைய களவொழுக்கத்தின்கண் இவளை அக்கள்வன் பிரிந்தமையாலுண்டான வேறுபாடு என்று அயலார் அலர்தூற்றா நிற்பர் என்பாள் ஒழியாவிடின் அயலார் பேசுவ என்னை என்றாள். இனி ஒரோவழி இவ்வேறுபாடு இவ்வெறியாடலால் தீர்ந்துவிடுமாயின் எம்பெருமான் இவட்குற்ற நோயெல்லாம் நம்பிரிவால் வந்தன வல்ல. இவள் அத்துணைக் காதலுடையவள் அல்லள் என நினைப்பன். அங்ஙனம் நினையின் யான் இறந்துபடுதல் தலை என்பாள், பிறிதின் ஒழியின் துறைவனுக்கு என் ஆது என்றாள். இருவழியிலும் யாம் உயிர்வாழ்தலரிது என்பது குறிப்பெச்சம். இருவர்-நான்முகனும் திருமாலும். உயர்ந்தும் என்றது அன்னமாய் வானத்தில் ஏறப் பறந்தும் என்றவாறு; பணிந்தும் என்றது பன்றியாய் நிலத்தை அகழ்ந்து அதனூடு தாழ்ந்தும் என்றவாறு. உணரான்-உணரப்படாதவன். உன்னலர்-நினையாதவர். துயர்ந்தும்-வருந்தியும். பிறிது மொழியின் என்றும் பாடம். இதற்கு வெறியிற் றணியாதாதலின் இந்நோய் பிறிதென்று பிறர்மொழியின் என்று பொருள் கூறுக. மெய்ப்பாடு-அச்சத்தைச் சார்ந்தமருட்கை. பயன்-நெஞ்சொடு சொல்லி ஆற்றுதல்.
|
|
செய்யுள்
30
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
வள்ளுறை
கழித்துத் துளக்குவேன் மகனு
மன்பும யிற்கழுத் தும்மலை யடியு
நெற்பிடித் துரைக்குங் குறியி னோரு
நடுக்கஞ ருற்ற பழங்கணன் னையரு
மயரா வெறியிற் றண்டா வருநோ |
10
|
|
யீயா
துண்ணுநர் நெடும்பழி போலப்
போகாக் காலைப் புணர்க்குவ வென்னாம்
நான்கெயிற் றொருத்தற் பிடர்ப்பொலி வரைப்பகை
யறுகால் குளிக்கு மதுத்தொடை யேந்த
முட்டாட் செம்மலர் நான்முகத் தொருவ |
15
|
|
னெண்ணிநெய்
யிறைத்து மணவழ லோம்பப்
புவியலந் துண்ட திருநெடு மாலோ
னிருகர மடுக்கிப் பெறுநீர் வார்ப்ப
வொற்றை யாழியன் முயலுடற் றண்சுட
ரண்டம் விளர்ப்பப் பெருவிளக் கெடுப்ப |
|
|
வளவாப்
புலன்கொள விஞ்சைய ரெண்மரும்
வள்ளையிற் கருவியிற் பெரும்புகழ் விளைப்ப |
|