மூலமும் உரையும்277



வோர்-மெய்யடியார். அனலாடல்-அனலேந்தி ஆடல். மும்மதம்-கன்னமதம், கபோலமதம், கோசமதம் என்பன. மும்மதத்து இருகோட்டு ஒரு நீள் கருங்களியார் மதயானை என்புழிச் செய்யுளின்பமுணர்க. கண்டதுண்டாயில் கூறுமின் என்பது குறிப்பெச்சம். மருங்கிறுமாப்ப எனக் கூட்டுக. நீள் யானை என ஒட்டுக. நீட்சி யானையின் நெடுமையைக் குறித்தது. களி-செருக்கு. மதயானை-மதம் இடையறாத யானை. மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-மதியுடம்படுத்துதல்.

 
 

செய்யுள் 32

நேரிசையாசிரியப்பா

 
   
5
  தன்னுட லன்றிப் பிறிதுண் கனையிருள்
பகல்வலிக் கொதுங்கிய தோற்றம் போலப்
பெருநிலவு கான்ற நீறுகெழு பரப்பி
லண்ட நாடவர்க் காருயிர் கொடுத்த
கண்டக் கறையோன் கண்டரு நுதலோன்
10
  முன்னொரு நாளி னாற்படை யுடன்று
செழிய னடைத்த சென்னி பாட
வெள்லருங் கருணையி னள்ளிரு ணடுகா
ளவனெனத் தோன்றி யருஞ்சிறை விடுத்த
முன்னவன் கூடன் மூதூ ரன்ன
15
  வெண்கைச் செவ்வாய்க் கருங்குழன் மகளிர்
செம்மணி கிடந்தநும் பசும்புனத் துலறி
வாய்சொரி மழைமதத் தழைசெவிப் புழைக்கைக்
குழிகட் பரூஉத்தாட் கூர்ங்கோட் டொருத்தல்
சினைதழை விளைத்த பழுமர மென்ன
  வறுகாற் கணமும் பறவையுங் கணையு
மேகமும் பிடியுந் தொடர
வேகிய துண்டே கூறுதிர் புரிந்தே.

(உரை)
கைகோள்: களவு. தலைவன் கூற்று

துறை: வேழம்வினாதல்.

     (இ-ம்.) இதற்கு. “மெய்தொட்டுப் பயிறல்’ (தொல். கள. 11) எனவரும் நூற்பாவின்கண், ‘ஊரும் பேரும் கெடுதியும் பிறவு நீரிற் குறுப்பி னிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும்’ என்னும் விதி கொள்க.