282கல்லாடம்[செய்யுள்33]



என்றவாறு. கண்ணை வலை என்றதற்கேற்ப உள்ளத்தை மீன் என்றார். ஈசன என்புழி அகரம் ஆறாவதன் பன்மையுருபு. எனவே யானும் மடலூர்ந்தேனும் அவளை எய்துவல் என்பது குறிப்புப் பொருளாயிற்று. பாய்சினம் என்புழிச் சினம் ஊக்க மிகுதியை உணர்த்திற்று. மெய்ப்பாடு-அழுகை. பயன்-மதியுடம்படுத்தல்.

 
 

செய்யுள் 33

நேரிசையாசிரியப்பா

 
   
5
  இருளொடு தாரகை யிரண்டினை மயக்கி
குழலென மலரென மயல்வரச் சுமந்து
வில்லினைக் குனித்துக் கணையினை வாங்கிப்
புருவங் கண்ணென வுயிர்விடப் பயிற்றி
மலையினைத் தாங்கி யமுதினைக் கடைந்து
10
  முலையெனச் சொல்லென வரவர வைத்து
மெய்யினைப் பரப்பி பொய்யினைக் காட்டி
யல்குலிடை யெனனெஞ் சுழலக் கொடுத்து
முண்டக மலர்த்தி மாந்தளிர் மூடி
யடியென வுடலென வலமற நிறீஇய
15
  மூரி வீழ்ந்த நெறிச்சடை முனிவர்
சருக்கங் காட்டு மருமறை சொல்லி
யுள்ளங் கருத்துக் கண்சிவந் திட்ட
மந்திரத் தழற்குழி தொட்டுவயிறு வருந்தி
முன்பி னீன்ற பேழ்வாய்ப் புலியினைக்
20
  கைதைமுட் செறித்த கூரெயிற் றரவினைக்
காருடல் பெற்ற தீவிழிக் குறளினை
யுரிசெய் துடுத்துச் செங்கரந் தரித்துச்
செம்மலர் பழித்த தாட்கீழ்க் கிடத்தி
யருணடம் புரிந்த தேவர் நாயக
25
  னொருநாண் மூன்று புரந்தீக் கொளுவப்
பொன்மலை பிடுங்கிக் கார்முக மென்ன
வளைத்த ஞான்று நெடுவிண் டடையக்
கால்கொடுத் தன்ன கந்திக ணிமிர்ந்து
நெருக்குபொழிற் கூட லன்னசெம் மகளிர்
  கண்ணெனுந் தெய்வக் காட்சியுட் பட்டோர்
வெண்பொடி யெருக்க மென்புபனை கிழியினைப்
பூசி யணிந்து பூண்டுபரி கடவிக்