288கல்லாடம்[செய்யுள்34]



இரக்கமெனினும் அமையும். மெய்ப்பாடு-அழுகை. பயன்-அல்ல குறிப்பிட்டமை தலைவனுக்குணர்த்துதல்.

 
 

செய்யுள் 34

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வற்றிய நரம்பி னெடுங்குரற் பேழ்வாய்க்
குழிவிழிப் பிறழ்பற் றெற்றற் கருங்காற்
றாளிப் போந்தின் றருமயிர்ப் பெருந்தலை
விண்புடைத் தப்புறம் விளங்குடற் குணங்கினங்
கானம் பாடிச் சுற்றிநின் றாடச்
10
  சுழல்விழிச் சிறுநகைக் குடவயிற் றிருகுழைச்
சங்கக் குறுந்தாட் பாரிடங் குனிப்பத்
தேவர்கண் பனிப்ப முனிவர்வாய் குழறக்
கல்லவ டத்திரண் மணிவாய்த் தண்ணுமை
மொந்தைகல் லலகு துத்திரி யேங்கக்
15
  கட்செவி சுழலத் தாழ்சடை நெறிப்ப
விதழிதா துதிர்ப்பப் பிறையமு துகுக்க
வெள்ளியம் பலத்துட் டுள்ளிய பெருமான்
கூடன் மாநக ரன்ன பொற்கொடி
யிரவிக் கண்ணிய வைகறை காறு
20
  மலமர லென்னைகொ லறிந்திலம் யாமே
வெண்முத் தரும்பிப் பசும்பொன் மலர்ந்து
கடைந்தசெம் பவளத் தொத்துடன் காட்டு
மிரும்புகவைத் தன்ன கருங்கோட்டுப் புன்னைச்
சினைமுக மேந்திய விணர்கொள்வாய்க் குடம்பையி
25
  னெக்கர்ப் புளினம் வெண்மையிட மறைக்குஞ்
சிறைவிரி தூவிச் செங்கா லன்னங்
குறும்பார்ப் பணைக்கும் பெடையொடு வெரீஇச்
சேவலு மினமுஞ் சூழுங்
காவின் மாறித் துயிலழுங் குதற்கே.

(உரை)
கைகோள்: களவு, தோழி கூற்று.

துறை: அல்லகுறியறிவித்தல்.