திருக்கோவையார் 11 ஆம் செய்யுள்
நலம்புனைந்துரைத்தல்
அஃதாவது:
இயற்கைப் புணர்ச்சி யெய்திய தலைவன் இயற்கையன்பினாலும் செயற்கையன்பினாலும் அவளுடைய
பெண்மை நலத்தினைப் பாராட்டிக் கூறுதல் என்பதாம். அதற்குச் செய்யுள்:
கூம்பலங் கைத்தலத்
தன்பரென்
பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை
யம்பலம் பாடலிற்
றேம்பலஞ் சிற்றிடை யீங்கிவ
டீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் பொதுள வோவளி
காணும் மகன்பணையே.
|
பொங்கி ழையைப் புனைநலம் புகழ்ந் தங்கதிர் வேலோன் அயர்வு நீங்கியது.
(இ-ள்)
அளிகாள்நும் அகன்பணை-வண்டுகளே! நும்முடைய வ்சிரிந்த மருத நிலத்தின்கண்ணே; கூம்பு
கைத்தலத்து அன்பர் என்பு ஊடு உருகக் குனிக்கும்-குவிக்கும் கைத்தலங்களையுடைய தன்மெய்யன்பருடைய
என்புகள் உள்ளே உருகும்படி கூத்தாடாநின்ற; பாம்பு அலங்காரப் பரன்தில்லை அம்பலம்
பாடலரின்-பாம்பாகிய அணிகலனையுடைய இறைவனுடைய தில்லைத் திருச்சிற்றம்பலத்தைப்
புகழ்ந்து பாடாத மடவோர் போல; தேம்பு சிறு இடை ஈங்கு இவள்-மெலியா நின்ற சிறிய
இடையினையுடைய இந்நங்கையினது; தீங்கனிவாய் கமழும் ஆம்பல் போது உளவோ-இனிதாகிய
கனிந்த வாய்போல நறுமணங்கமழும் ஆம்பல் மலர்கள் உள்ளனவோ உளவாயின் சொல்லுமின்
என்பதாம்.
(வி-ம்.)
கூம்பலங்கைத்தலம் என்புழி அல்அம் இரண்டும் அல்வழிச்சாரியை. பாப்பலங்காரம் எனல்
வேண்டியது பாம்பலங்காரம் என எதுகை நோக்கி மெலிந்து நின்றது. தில்லை அம்பலத்தைப்
பாடாதார் தேம்புதல்போலத் தேம்பும் சிற்றிடை என்க. ஈங்கிவள் என்றது இவள் என்னும்
ஒருசொல் மாத்திரையாய் நின்றது. போது-மலர். அளிகாள்: விளி. அளி-வண்டு. பணை-மருதநிலம்.
மெய்ப்பாடு-உவகை. பயன்-நயப்புணர்த்துதல்.
|
|
செய்யுள்
35
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
|
|
அருடருங்
கேள்வி யமையத் தேக்கப்
பற்பல வாசான் பாங்குசெல் பவர்போன் |
|