298கல்லாடம்[செய்யுள்36]



எழுமையும்-எழுபிறப்பின் கண்ணும். ‘உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று’ என்பவாகலின் எலாவற்றினும் சிறந்த கற்பினைப் பேணும்பொருட்டு நாணத்தை நெகிழவிடும் தலைவி தன் உயிரினும் சிரந்த அதன் அழிவிற்காற்றாது இரங்கும் இப்பெருந்தகைமை பெரிதும் இன்பம் தருவதொன்றாதல் உணர்க. மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-உடன்போகத்துணிதல்.

 
 

செய்யுள் 36

நேரிசையாசிரியப்பா

 
   
5
  மைகுழைத் தன்ன தொள்ளியஞ் செறுவிற்
கூர்வாய்ப் பறைதபு பெருங்கிழ நாரை
வஞ்சனை தூங்கி யார லுண்ணு
நீங்காப் பழனப் பெருநகர்க் கூடற்
கரமான் றரிந்த பெருமா னிறைவன்
10
  பொன்பொழித் த்வெடுத்த லின்புறு திருவடி
யுளம்விழுங் காத களவினர் போலவென்
னுயிரொடும் வளர்ந்த பெருநாண் டறியினை
வெற்பன் காதற் காலுலை வேலையின்
வலியுடைக் கற்பி னெடுவளி சுழற்றிக்
15
  கட்புலங் காணாது காட்டைகெட வுந்தலி
னென்போ லிந்நிலை நின்றவர் படைக்கும்
பேறாங் கொழிக பெருநாண் கற்பின
ரெற்பே றுடைய ராயிற்
கற்பிற் றோன்றாக் கடனா குகவே.

(உரை)
கைகோள்: களவு. தலைவிகூற்று

துறை: நாணிழந்து வருந்தல்.

     (இ-ம்.) இதற்கு “உயிரினும் சிறந்தன்று......................தோன்றுமன் பொருளே” (தொல். கள. 22) எனவரும் நூற்பாவின்கண் ‘தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும்’ எனவரும் விதிகொள்க.

1-4: மைகுழைத்..............................கூடல்

     (இ-ள்) மைகுழைத்து அன்ன தொள்ளியம் செறுவில்-மையினைக் குழைத்தாற்போன்ற கரிய சேற்றினையுடைய அழகிய கழனியின்கண்ணே; பரைதபு பெருகிழ நாரை-பறக்கும் ஆற்