|
|
செய்யுள்
38
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
கோடிய
கோலினன் செருமுகம் போலக்
கனைகதிர் திருகிக் கல்சேர்ந்து முறைபுகப்
பதினெண் கிளவி யூர்துஞ் சியபோற்
புட்குலம் பொய்கை வாய்தழக் கொள்ள
வேள்சரத் துடைகுநர் கோல நோக்கி |
10
|
|
யிருண்மகள்
கொண்ட குறுநகை போல
முல்லையு மௌவலு முருகுயிர்த் தவிழத்
தணந்தோ ருளத்திற் காமத் தீப்புக
மணந்தோர் நெஞ்சத் தமுத நீர்விட
வன்றில்புற் சேக்கை புக்கலகு பெடையணைய |
15
|
|
வந்தண
ரருமறை யருங்கிடை யடங்க
முதிர்கனி மூல முனிக்கண மறுப்பக்
கவலையும் பூவுந் தோண்முடி கமழ
விரிவலை நுளையர் நெய்த லேந்தித்
துத்தங் கைக்கிளை யளவையின் விளைப்ப |
20
|
|
நீரர
மகளிர் செவ்வாய் காட்டிப்
பசுந்தாட் சேக்கொ ளாம்பன் மலரத்
தோளு மிசையுங் கூறிடுங் கலையு
மருட்டிரு வெழுத்தும் பொருட்டிரு மறையும்
விரும்பிய குணமு மருந்திரு வுருவு |
25
|
|
முதலெண்
கிளவியும்விதமுட னிரையே
யெட்டு மேழுஞ் சொற்றன வாறு
மைந்து நான்கு மணிதரு மூன்றுந்
துஞ்சலி லிரண்டுஞ் சொல்லரு மொன்று
மாருயிர் வாழ வருள்வர நிறுத்திய |