திருக்கோவையார் 19 ஆம் செய்யுள்
ஆடிடத்துய்த்தல்
அஃதாவது:
இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவியைப் பிரியக் கருதிய தலைவன் தன் பிரிவினை
அவள் ஆற்றாள் என நன்னயமுரைத்தும், தம் நிலையுரைத்தும், தெளிவகப்படுத்தியும் அவளைத்
தேற்றிப் பிரிபவன், இனி நீ சென்று நின் தோழியரோடு கூடி விளையாடுவாயாக! யான்
இப்பொழுது சென்று விரைவில் நின்பால் வந்து சேர்வேன் என்று அவளை ஆடுமிடத்திற்குச்
செலுத்தா நிற்றல் என்பதாம். அதற்குச் செய்யுள்:-
தெளிவளர் வான்சிலை
செங்கனி
வென்முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன் னாய்முன்னி
யாடுபின் யானளவா
வொளிவளர் தில்லை யொருவன்
கயிலை யுகுபெருந்தேன்
றுளிவார் சாரற் கரந்துங்க
னேவந்து தோன்றுவனே.
|
வன்புறையின் வற்புறுத்தி அன்புறு மொழியை யருக்கன்றது.
(இ-ள்)
வளர்வான் சிலை செம்கனி வெள்முத்தம் திங்களின் வாய்ந்து அளி வளர் வல்லி அன்னாய்-கால்
நிமிர்ந்த பெரிய விற்களும் சிவந்த கொவ்வைக் கனியும் வெள்ளியமுத்துக்களும் ஒரு
திங்களின்கண்ணே பொருந்த, அத்திங்களையும் சுமந்து வண்டுகள் தங்குதற்கும் இடனான ஒரு
பூங்கொடியை நிகர்த்த நங்காய்!; தெளி-யான் சொன்னவற்றை உணர்ந்து கொள்வாயாக;
முன்னி ஆடு-இனி நீ முற்பட்டுச் சென்று நின் தோழிமாரோடு விளையாடுவாயாக; ஒளிவளர்
தில்லை அளவா ஒருவன் கயிலை உகு பெரு தேந்துளி வளர் சாரல் கரந்து-ஒளி வளரா நின்ற
தில்லையின்கண் உளனாகிய அளக்கப்படாத ஒப்பற்ற சிவபெருமானுடைய கயிலையினிடத்துச்
சிந்துகின்ற மிக்க தேன்துளிகள் பெருகாநின்ற சாரலின்கண் அமைந்த ஒரு சோலையின்கண்
சிறிதுபொழுது மறைந்திருந்து; யான்பின் உங்ஙன் வந்து த்ன்றுவன்-யான் மீண்டும் உவ்விடத்தே
வந்து தோன்றுவேன்காண் என்பதாம்.
(வி-ம்.)
தெளிவளர் வான்சிலை என்புழித் தெளிக்கு ஒளி என்று பொருள் கூறினும் அமையும். சிலை-வில்.
இது புருவங்களுக்கு உவமை. கனி-ஈண்டுக் கொவ்வைப் பழம். இது வாய் இதழ்களுக்
|