316கல்லாடம்[செய்யுள்39]



குவமை. முத்தம் பற்களுக்குவமை. திங்கள் முகத்திற்குவமை. சிலை முதலியன திங்கள் மண்டிலத்தின்கண் பொருந்த அம்மண்டிலத்தை ஒரு பூங்கொடி தாங்கியிருப்பின் அதனை ஒப்பாய் என்றவாறு. இஃதில் பொருளுவமை பூங்கொடி என்பான் அளிவளர் வல்லி என்றான். அளி-வண்டுகள். முன்னுதல்-முற்படுதல். அளவா-அளக்கப்படாத. கரத்தல்-மறைந்திருத்தல். உங்ஙன்-உங்கு; சுட்டு. திங்களின் வாய்ந்து என்புழி வாய்ந்து என்னும் செய்தென்னெச்சம் வாய்ப்ப என்னும் செயவென்னெச்சத்தின் திரிபாகலின் அவற்றுள்,-

“முதலி னான்கு மீற்றின் மூன்றும்
 வினைமுதல் கொள்ளும் பிறவுமேற் கும்பிற”
(நன்னூல். சூ-344)

என்பதனால் அளிவளர் என்னும் பிறவினை கொண்டது. சாரல்: ஆகுபெயர். மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-இடங்குறித்து வற்புறுத்தல்.

 
 

செய்யுள் 39

நேரிசையாசிரியப்பா

 
   
5
  முன்னி யாடுக முன்னி யாடுக
குமுதமும் வள்ளையு நீலமுங் குமிழுந்
தாமரை யொன்றிற் றடைந்துவளர் செய்த
முளரிநிறை செம்மகண் முன்னி யாடுக
நில்பெறு தவத்தினை முற்றிய யானும்
10
  பலகுறி பெற்றிவ் வுலகுயி ரளித்த
பஞ்சின் மெல்லடிப் பாவை கூறாகிக்
கருங்குரு விக்குக் கண்ணருள் கொடுத்த
வெண்டிரு நீற்றுச் செக்கர் மேனியன்
கிடையிற் றாபதர் தொடைமறை முழக்கும்
15
  பொங்கர்க் கிடந்த சூற்கார்க் குளிறலும்
வல்லியைப் பரியும் பகடுவிடு குரலும்
யாணர்க் கொடுஞ்சி நெடுந்தே ரிசைப்பு
மொன்றி யழுங்க நின்ற நிலை பெருகி
மாதிரக் களிற்றினைச் செவிடுறக் கொடுக்கும்
20
  புண்ணியக் கூட லுண்ணிறை பெருமான்
றிருவடி சுமந்த வருளினர் போலக்
கருத்தே னுடைத்துச் செம்மணி சிதறிப்
பாகற் கோட்டிற் படர்கறி வணக்கிக்
கல்லென் றிழிந்து கொல்லையிற் பரக்குங்