|
|
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பூமணியானை
பொன்னென வெடுத்துத்
திங்களும் புயலும் பருதியுஞ் சுமந்த
மலைவருங் காட்சிக் குரிய வாகலி
னிறையுடைக் கல்வி பெறுமதி மாந்த
ரீன்றசெங் கவியெனத் தோன்றிநனி பரந்து |
10
|
|
பாரிடை
யின்ப நீளிடைப் பயக்கும்
பெருநீர் வையை வளைநீர்க் கூட
லுடலுயி ரென்ன வுரைதரு நாயகன்
கடுக்கைமலர் மற்றி வேப்பலர் சுடி
ஐவாய்க் காப்புவிட் டணிபூ ணணிந்து |
15
|
|
விரிசாடை
மறைத்து மணிமுடி கவித்து
விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி யெடுத்து
வழுதி யாகி முழுதுல களிக்கும்
பேரரு ணாயகன் சீரருள் போல
மணத்துடன் விரித்த கைதையங் கானத் |
20
|
|
தோடா
வென்றிப் பொலம்பூட் குரிசில்
சின்னங் கிடந்த கொடிஞ்சி மாத்தோர்
நொச்சிப் பூவுதிர் நள்ளிரு ணடுநாள்
விண்ணஞ் சுமந்து தோற்றஞ் செய்தெனத்
தன்கண் போலு மென்க ணோக்கிக் |
25
|
|
கள்வரைக்
காணு முள்ளம் போலச்
செம்ம்னந் திருகி யுள்ளந் துடித்துப்
புறன்வழங் காது நெஞ்சொடு கொதித்தனண்
மாறாக் கற்பி னன்னை
கூறா மதியத் திருநுதற் கொடியே. (2)
|
(உரை)
கைகோள், களவு, தோழிகூற்று
துறை: தாயறிவு
கூறல்
(இ-ம்.)
இதுவுமது
1
- 8: பூமணி..........................................நாயகன்
(இ-ள்) பூமணியானை
பொன் என எடுத்து-மலர்களையும் மணிகளையும் யானைகளையும் பொன்னையும் சுமந்துகொண்டு;
|