320கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 242 ஆம் செய்யுள்:
விரதியரை வினாவல்

     அஃதாவது: மகட்போக்கிய செவிலித்தாய் அவளைத் தேடிப் பாலை நிலத்திலே அடியொற்றிச் செல்பவள் அப்பாலை நிலத்தின்கண் தன்னெதிரே வருகின்ற தாபதரை நோக்கி என் மகளொருத்தியும் பிறன் மகனொருவனும் நும்மெதிரே செல்லக் கண்டீரோ என்று வினவாநிற்றல். என்றவாறு; அதற்குச் செய்யுள்:-

சுத்திய பொக்கணத் தென்பணி
     கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி
     யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு
     மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு
     மோவோர் பெருந்தகையே.

வழிவரு கின்ற மாவிர தியரை மொழிமின்க ளென்று முன்னி மொழிந்தது.

     (இ-ள்) சுத்திய பொக்கணத்து-சுத்தியை யுடைத்தாகிய பொக்கணத்தையும்; என்பு அணி-எலும்பாகிய அணிகலனையும்; கட்டங்கம்-கடங்கமென்னும் மழுப்படை யினையும்; சூழ்சடை-சுற்றிய சடையினையும்; பொத்திய வெண்கோலத்தினீர்-உடல் முழுதும் மூடிய வெள்ளிய கோலத்தையுமுடையீர்; புலியூர் அம்பலவர்க்கு உற்ற பத்தியர் போல-புலியூர்க்கணுண்டாகிய அம்பலவாணர்பால் மிக்க அன்புடையாரைப் போல; பணைத்து இறுமாந்த பயோதரத்து ஓர் பித்தி-பூரித்துச் செம்மாந்த முலைகளையுடையாளொரு பேதை; தன்பின் வர ஓர் பெருந்தகை முன் வருமோ-தனக்குப் பின்னே வாரா நிற்ப ஒரு பெருந்தகைமையையுடைய நம்பி நுங்கள் முன்னே சென்றனனோ கூறுமின்! என்பதாம்.

     (வி-ம்.) சுத்தி-பிறர்க்குத் திருநீறு கொடுத்தற்கு இப்பி வடிவாகத் தலையோட்டல் அமைக்கப்படும் ஒரு கருவி. பொக்கணம்-சிறுபொதி. இதனை இக்காலத்தார் பொட்டணம் எனவும் பொட்டலம் எனவும் வழங்குவர். எற்பணி என நிற்றல் வேண்டிய புணர்ச்சி என்பணி என இயல்பாய் நின்றது. கடங்கம்-கட்டங்கம் எனத் திரிந்து நின்றது. கடங்கம்-மழு. பொத்திய வெண்கோலத்தினீர் என மாறுக. என்றது திருநீறு சண்ணித்த கோலமுடையீர் என்றவாறு. பணைத்தல்-ஈண்டு பூரித்தல் என்பதுபட நின்றது. இறுமாத்தல்-யாரோ எமக்கீடெனச் செம்மாந்திருத்தல். சிவனடியார் இங்ஙனம் செம்மாந்திருப்பர் என்பதனை,