மூலமும் உரையும்321



“இறுமாந் திருப்பன் கொலோ-ஈசன்
     பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
     கிறுமாந் திருப்பன் கொலோ” (அப்பர். திருவங்கமாலை)

எனவரும் அப்பரடிகள் அருள் வாக்கானும் உணர்க. இனி முலைக்கிறுமாத்தல்-நிமிர்ந்து வீறுற்றுத் திகழ்தல். பயோதரம்-முலை. செறலால் தலைவியைப் பித்தி என்றாள். தன் மகள் உள்ளங்கவர்ந்த கள்வன் பெருந்தகையோனாதல் ஒருதலை என்னும் துணிவால் பெருந்தகை என்றாள். வெண்பத்திய கோலத்தினீர் எனவும் பாடம். இதற்கு வெண்ணீற்றால் பத்திபட விட்ட முண்டத்தையுடய கோலம் என்றுரைக்க. மெய்ப்பாடு-அழுகை. பயன்-தலைவியைக் காண்டல்.

 
 

செய்யுள் 40

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நிலவுபகல் கான்ற புண்ணிய வருட்பொடி
யிருவினை துரந்த திருவுடன் மூழ்கி
நடுவுடல் வரிந்த கொடிக்காய்ப் பத்தர்
சுத்தியமர் நீறுடன் றேள்வலன் பூண்டு
முடங்குவீ ழன்ன வேணிமுடி கட்டி
10
  யிருநான்கு முற்ற மடியரக் காய்ந்திவ்
வாறெதிர்ப் பட்ட வருந்தவத் திருவினிர்
தணியாக் கொடுஞ்சுரந் தருந்தழ றாவிப்
பொன்னுடற் றேவ ரொக்கலொடு மயங்கிக்
கொண்மூப் பஃறிரைப் புனலுடன் றாழ்த்திப்
15
  பிதுளிய தருவினுட் புகுந்திமை யாது
மருந்துபகுத் துண்டு வல்லுயிர் தாங்கும்
வடைவந் தனையென வழங்குமொழி நிற்க
தாய்கா றாழ்ந்தன ளாயம் வினவினாள்
பாங்கியைப் புல்லின ளயலுஞ் சொற்றனள்
20
  மக்கட் பறவை பரிந்துள மாழ்கினள்
பாடலப் புதுத்தார்க் காளைபின் னொன்றாற்
றள்ளா விதியிற் செல்குந ளென்று
தழல்விழிப் பேழ்வாய்த் தரக்கின் றுளிமுலை
பைங்கட் புல்வாய் பாலுணக் கண்ட
  வருணிறை பெருமா னிருணிறை மிடற்றோன்