மூலமும் உரையும்327



திருக்கோவையார் 108 ஆம் செய்யுள்
அவயவங்கூறல்.

     அஃதாவது: தோழியை மதியுடம்படுத்த தலைவன் தலைவியின் அடையாளங்கள் இவை எனத் தோழிக்குக் கூறுதல். அதற்குச் செய்யுள்:-

குவவின கொங்கை குரும்பை
     குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின வாணகை வெண்முத்தங்
     கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் றாம்பொழிற்
     சிற்றம் பலமனையாட்
குவவின நாண்மதி போன்றொளிர்
     கின்ற தொளிமுகமே.

அவயவ மவளுக் கிவையிவை யென்றது,

     (இ-ள்) தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில் சிற்றம்பலம் அனையாட்கு-விரதங்களான் வருந்துடற்கேதுவான தவத்தொழிலை நீக்கித் தன் மெய்யடியார்க்கு இன்புறுதற்குக் காரணமான அன்புநெறியை அருளியவனது தாழ்ந்த பொழிலையுடைய சிற்றம்பலத்தை ஒப்பாளுக்கு; குவவின கொங்கை குரும்பை-குவிந்த கொங்கைகள் குரும்பையை ஒக்கும்; குழல் கொன்றை-கூந்தல் கொன்றைப்பழத்தை ஒக்குக்; செவ்வாய் கொவ்வை-சிவந்த வாய் கொவ்வைக்கனியை ஒக்கும்; கவவின வாள்நகை வெள்முத்தம்-அதனகத்திலமைந்த ஒளியுடைய பற்கள் வெள்ளிய முத்தை ஒக்கும்; கண்மலர் செங்கழுநீர்-கண்மலர்கள் செங்கழுநீர் மலரை ஒக்கும்; ஒளிமுகம் உவவின நாள் மதிபோன்று ஒளிர்கின்றது-ஒளியுடைய அவள் முகம் பருவ நாளின் கண்ணதாகிய நிறை திங்கள்போல விளங்கா நின்றது என்பதாம்.

     (வி-ம்.) குரும்பை-தெங்கிளங்காய்; பனங்குரும்பையுமாம். குழல்-கூந்தல். கொன்றை, கொவ்வை, செங்கழுநீர் இம்மூன்றும் ஆகுபெயர்கள். கவவுதல்-அகத்திடுதல். வாள்-ஒளி. நகை-பல். மலர் செங்கழுநீர்: வினைத்தொகை எனினுமாம். தவவினை-மிக்கவினை எனினுமாம். தவவினை தீர்ப்பவன் எனவே வருந்துதற்கேதுவாகிய தவத்தொழிலை விலக்கி இன்புறுதற்கேதுவாகிய அன்புநெறியைத் தன் அடியார்க்கு அருளியவன் என்பது கருத்தாயிற்று. சிற்றம்பலம் மெய்யடியார்க்குப் பேரின்பம் அளித்தல்போல எனக்குப் பேரின்பம் அளிப்பவள் என்பான் சிற்றம்பலம் அனையாள் என்றான். உவவின நாள்-பூரணை நா. எனவே இவ்வடையாலங்கள் என் காதலியினுடையன