|
|
செய்யுள்
41
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
விது
குத்திய குறுந்தாட் பாரிடம்
விண்டலை யுடைத்துப் பிறைவாய் வைப்பக்
குணங்கினந் துள்ளக் கூளியுங் கொட்ப
மத்தி யந்தணன் வரேஞ்சொலி விடுப்பத்
தில்லை கண்ட புலிக்கான் முனிவனுஞ் |
10
|
|
சூயை
கைவிடப் பதஞ்சலி யாகிய
வாயிரம் பணாடவி யருந்தவத் தொருவனுங்
கண்ணால் வாங்கி நெஞ்சரை நிறைப்பத்
திருநட நவின்ற வுலகுயிர்ப் பெருமான்
கடன்மாக் கொன்ற தீப்படர் நெடுவே |
15
|
|
லுருளினர்க்
கடம்பி னெடுந்தார்க் கண்ணிய
னரிமகள் விரும்பிப் பாகஞ் செய்து
களியுட னிறைந்த வொருபரங் குன்றமும்
பொன்னந் தோகையு மணியரிச் சிலம்பு
நிரைத்தலைச் சுடிகை நெருப்புமி ழாரமும் |
20
|
|
வண்டுகிளை
முரற்றிய பாசிலைத் துளவு
மரகத முடற்றிய வடிவொடு மயங்க
மரக்கா லாடி யரக்கர்க் கொன்ற
கவைத்தலை மணிவேற் பிறைத்தலைக் கன்னி
வடபாற் பரிந்த பலிமணக் கோட்டமுஞ் |
25
|
|
சூடகந்
தோள்வளை கிடந்துவில் வீச
யாவர்தம் பகையும் யாவையிற் பகையும்
வலனிற் காத்து வருவன வருளு
மூழியுங் கணமென வுயர்மகன் பள்ளியு
முவாமதி கிடக்குங் குண்டுகடல் கலக்கி |
|
|
மருந்துகைக்
கொண்டு வானவர்க் கூட்டிய
பாகப் பக்க நெடியோ னுறையுளுந்
தும்பி யுண்ணாத் தொங்கற் றேவர்
மக்களொடு நெருங்கிய வீதிப் புறமு |