338கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 276 ஆம் செய்யுள்:
வன்புறை யெதிரழிந்திரங்கல்

     அஃதாவது: தலைவன் வரைபொருட் பிரிவினை ஆற்ற வேண்டும் எனத் தோழி வழியொழுகி வற்புறுத்துவாளாக; அத்கேட்ட தலைவி ‘தலைவன் வரைவு நீடுதலால் தமக்கு ஒரு பற்றுக்கோடு இன்றி வருந்துந் திருவினையுடையார்க்கு அவன் வரைவு மிகவும் இனிது. யான் ஆற்றுகிலேன்’ என்று வன்புறை எதிரழிந்து இரங்கா நிற்றல். அதற்குச் செய்யுள்:-

வந்தாய் பவரையில் லாமயின்
     முட்டை யிளயமந்தி
பந்தா டிரும்பொழிற் பல்வரை
     நாடன்பண் போவினிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்றென்
     றில்லை தொழார்குழுப்போற்
சிந்தா குலமுற்றுப் பற்றின்றி
     நையுந் திருவினர்க்கே.

வன்கறை வேலோன் வரைவு நீட வன்புறை யழிந்தவள் மனமழுங் கியது

     (இ-ள்) கொந்து ஆர் நறும் கொன்றைக் கூத்தன் தெந்தில்லை தொழார் குழுப்போல்-கொத்துக்கள் நிரம்பிய நறிய கொன்றையை யணிந்த கூத்தனது தெறிக்கிக ணுண்டாகிய தில்லைத் திருப்பதியை வணங்காத மடவோர் கூட்டம்போல; சிந்தாகுலம் உற்றுப் பற்று இன்றி நையும் திருவினர்க்கு-மனக்கலக்கத்தை யுற்றுத் தமக்கொரு பற்றுக்கோடின்றி வருந்தும் திருவினையுடையவர்க்கு; வந்து ஆய்பவரை இல்லாமயில் முட்டை-சென்று ஆராய்வாரை உடைத்தல்லாத மயிலின் முட்டையை; இளைய மந்தி பந்து ஆடு இரும்பொழில் பல்வரை நாடன் பண்போ-இளமையுடைய மந்தி பந்தாடி விளையாடும் பெரிய பொழிலையும் பலவாகிய மலைகளையுமுடைய நாட்டையுடைய நம்பெருமானது இயல்போ; இனிது-இனிய தொன்றாய் இருந்தது என்பதாம்.

     (வி-ம்.) நையுந்திருவினர்க் கென்றது நையுந்துணையா யிறந்துபடாதிருந்து அவனளிபெற்ற ஞான்று இன்புறவெய்தும் நல்வினையாட்டியார்க் கென்றவாறு. எனவே, யானது பெறுமாறில்லை யென்றாளாம். உற்றதாராய்ந் தோம்புவாரில்லாத மயிலினது முட்டையால் ஈன்ற வருத்தமறியாத விளமந்தி, மயிலின் வருத்தமும் முட்டையின் மென்மையும் பாராது பந்தாடுகின்றாற்போலக் காதலரான் வினவப்படாத என் காமத்தை நீ யிஃதுற்றறியாமையான் எனது வருத்தமும்