மூலமும் உரையும்339



காமத்தினது மென்மையும் பாராது, இவ்வா றுரைக்கின்றாயென உள்ளுறை வகையாற் றோழியை நெருங்கி வன்புறை யெதிரழிந்தவாறு கண்டு கொள்க. அல்லாதூஉம், வந்தாய்பவர் தோழியாகவும், இளமந்தி தலைமகனாகவும், பந்தாடுதல் தலைமகளது வருத்தம் பாராது தான் வேண்டியவாறொழுகு மவனதொழுக்கமாகவும் உரைப்பினுமமையும். திருவினெற்கே என்பது பாடமாயின், இவ்வாறு வன்கண்மையேனாய் வாழுந் திருவையுடையேற்கென வுரைக்க. இதற்கு திரு: ஆகுபெயர். மெய்ப்பாடு-அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்-ஆற்றியிருத்தல்.

 
 
செய்யுள் 42
 
   
5
  ஈன்றநெஞ் சூழற் கவர்விழி பிழைத்த
வெறிவிழிப் பிணர்மருப் பாமான் கன்றினை
மென்னடைக் குழைசெவிப் பெறாவெறுங் கரும்பிடி
கணிப்பணைக் கவட்டு மணற்சுனைப் புறத்தும்
தழைக்குற மங்கைய ரைவனந் துவைக்கு
10
  முரற்குழி நிரைத்த கல்லறைப் பரப்பு
மானிட மாக்க ளரக்கிகைப் பட்டென
நாச்சுவை மடிக்கு முணவுத வாது
வைத்துவைத் தெடுக்குஞ் சார னாட
னறிவும் பொறையும் பொருளறி கல்வியு
15
  மொழுக்கமுங் குலனு மழுக்கறு தவமு
மினிமையும் பண்பு மீண்டவு நன்றே
வெடிவாற் பைங்கட் குறுநரி யினத்தினை
யேழிடந் தோன்றி யினனூற் கியைந்து
வீதி போகிய வாலுளைப் புரவி
20
  யாக்கிய விஞ்சைப் பிறைமுடி யந்தணன்
கொண்டோற் கேகுங் குறியிடை நன்னா
ளன்னைய ரில்லத் தணிமட மங்கையர்
கண்டன கவருங் காட்சி போல
வேலன் பேசி மறிசெகுத் தோம்பிய
25
  காலங் கோடா வரைவளர் பண்டம்
வருவன வாரி வண்டினந் தொடரக்
கட்கயல் விழித்துப் பூத்துகின் மூடிக்
குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து
கருங்கான் மள்ள ருழவச் சேடியர்