மூலமும் உரையும்345



திருக்கோவையார் 191 ஆம் செய்யுள்.
அன்னமோடழிதல்

     அஃதாவது: ஒருவழித் தனந்த தலைவனுடைய பிரிவினை ஆற்றாத தலைவி அன்னப் பறவையை நோக்கி உலகமெல்லாம் துயிலா நின்ற இந்நிலைமைக் கண்ணும் யான் துயிலாமைக்குக் காரணமாகிய என் வருத்தத்தைக் கண்டுவைத்தும் இப்பெடையன்னம் அவர்பாற் சென்று என் நிலைமை சொல்லாமல் தன் சேவலைக்கூடிக் கவலையின்றித் துயிலா நினது என்று அவ்வன்னத்தோடு அழிந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்:-

மூவல் தழீஇய அருண்முத
     லோன்தில்லைச் செல்வன்முந்நீர்
நாவல் தழீஇயவிந் நானிலந்
     துஞ்சும் நயந்தவின்பச்
சேவல் தழீஇச்சென்று தாந்துஞ்சும்
     யான்துயி லாச்செயிரெங்
காவல் தழீஇயவர்க் கோதா
     தளிய களியன்னமே.

இன்னவகைய ளிருவருதுயரம் அன்னத்தோ டழிந்துரைத்தது

     (இ-ள்) மூவல் தழீஇய அருள் முதலோன்-மூவலென்னும் திருப்பதியிற் பொருந்திய அருளையுடைய முழுமுதற் கடவுளும், தில்லைச் செல்வன்- திருத்தில்லையின்கண் மெய்யடியார்க் கெல்லாம் செல்வமாய் உள்ளவனும் ஆகிய சிவபெருமானுடைய; முந்நீர் நாவல் தழீஇய இந்நால் நிலம் துஞ்சும் - கடலாற் சூழப்பட்ட நாவலம் பொழில் என்னும் பெயரைப் பொருந்திய இந்த நான்குவகை நிலத்தினையுமுடைய உலகின் கண் உள்ள உயிரெல்லாம் இப்பொழுது துயிலா நின்றன; யான் துயிலாச் செயிர்- இப்பொழதினும் யான் ஒருத்தியே துயிலாமைக்குக் காரணமாகிய என்னுடைய வருத்தத்தை; எம் காவல் தழீ இயவர்க்கு ஓதாது- எம்முயிர்க் காவலைப் பொருந்தின எம் பெருமான் பாற் சென்று கூறாமல்; அளிய களி அன்னம்- நற்பண் பின்மையின் இரங்குதற்குக் காரணமான களிப்பினையுடைய இப்பெடை யான்னம்; சென்று- இவ்விடத்துநின்றும் போய்; நயந்த இன்பச் சேவல் தழீஇ தான் துஞ்சும் - தான் விரும்பிய இன்பத்தைத் தரும் தனது சேவலை அணைத்துக்கொண்டு ஒரு கவலையுமின்றித் தானுந் துயிலா நின்றது. அந்தோ! இனி அது கூறுவார் யார் என்பதாம்.