354கல்லாடம்[செய்யுள்44]



     (வி-ம்.) வருடின் என்பது வருட்டின் என வ(வி-ம்.) லிந்து நின்றது. வசிக்கின்- வயப்படுத்தினால். துளங்கும் - நடுங்குவாள். தெருட்டின்- தெளிவிப்பின். ஆதலால் செப்பும் வகை இல்லை என்க. இறைவன் பகன் என்னும் கதிரவனுடைய கண்களைப் பறித்தார் என்பது வரலாறாகலின் சீரருக்கன் குருட்டிற் புகச்செற்ற கோன் என்றான். குருட்டிற் புகுதலாவது குருட்டுத் தன்மையை எய்துதல். இவ்வரலாற்றினை, "பகற்சுடரிப் பகற்கிருட் பரப்பிருளைப் படுத்தே" எனவரும் தக்கயாகப் பரணியானு (சகூ0) முணர்க. புலியூர் குறுகார் மனம் அறியாமையால் இருண்டிருத்தலின் குழலுக்குவமை யாக்கினார். குழல் - கூந்தல். ஒருவாற்றானு மரிது ஆதலால் யான் அவட்குக் கூறாதே பிரிவல். நீ அவளை ஆற்றுவித்துக் கொண்டிருப்பாயாக என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு- அழுகை. பயன் - வரைவு மாட்சிமைப் படுத்துதற்குப் பிரிதல்.

 
 

செய்யுள் 44

நேரிசையாசிரியப்பா

 
   
5
  இலதெனி னுளதென் றுள்ளமோடு விதித்துஞ்
சொல்லா நிலைபெறுஞ் சூளுறின் மயங்கிச்
செய்குறி குணனுஞ் சிந்தையுட் டிரிவு
முழைநின் றறிந்து பழங்கண் கவர்ந்துங்
கண்ணெதிர் வைகி முகன்கொளிற் கலங்கியும்
10
  வழங்குறு கிளவியிற் றிசையென மாழ்கியு
மொருதிசை நோக்கினு மிருக்கினு முடைந்தும்
போக்கென வுழைய ரயர்ப்பிடை கிளப்பினு
முலைக்குவட் டொழுக்கிய வருவிதண் டரளஞ்
செம்மணி கரிந்து தீத்தர வுயிர்த்தும்
15
  போமென் வாய்ச்சொற் கேட்பினும் புகைந்துங்
கொள்ளா ரறுதியுங் கொண்டோ ரிசைத்தலு
மீதெனக் காட்டிய மயின்மட வரற்கு
முன்னொரு வணிகன் மகப்பே றின்மையின்
மருமான் றன்னை மகவெனச் சடங்குசெய்
20
  துள்ளமுங் கரணமு மவனுழி யொருக்கி
முக்கவர்த் திருநதி துணையுடன் மூழ்கி
யப்புலத் துயிர்கொடுத் தருட்பொருள் கொண்டபின்
மற்றவன் றாயம் வவ்வுறு மாக்கள்
காணிகைக் கொண்ட மறுநிலை மைந்தனை
  நிரைத்துக் கிளைகொ ணெடுவழக் குய்த்தலு
மைந்தனுங் கேளிரு மதிமுடிக் கடவுணின்