மூலமும் உரையும்359



திருக்கோவையார் 3 ஆம் செய்யுள்
தெளிதல்

     அஃதாவது; ஊழ்வினை கூட்டத் தலைவியைத் தலைவன் ஒரு பூம்பொழிலிற் றலைப்பட்டுக் கண்டுழி இவள் மானிடமகளோ தெய்வமகளோ என ஐயுற்றவன் பின்னர் அவள் கண்இமைத்தலையும் கால் நிலந்தோய்ந்திருத்தலையும், கண்ணுற்று இவள் தெய்வமகள் அல்லள் மானிடமகளே எனத் தெளிந்து தன்னுட் கூறியது என்பதாம். அதற்குச் செய்யுள் :-

பாயும் விடையரன் றில்லையன்
     னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர்
     வாடுந் துயரமெய்தி
யாயு மனனே யணங்கல்ல
     ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத்
     தோளிச் சிறுநுதலே.

"அணங்கல்லளென் றயில்வேலவன் குணங்களை நோக்கிக் குறித்துரைத்தது"

     (இ-ள்) பாயும் விடை அரன் தில்லை அன்னாள் - பாய்ந்தோடுங் காளையூர் தியையுடைய சிவபெருமானுடைய திருத்திலையைப் போன்று எல்லா நலங்களுமுடைய இவளுடைய; படைகண் இமைக்கும் - வாளும் வேலும் அம்பும் ஆகிய படைக்கலங்களை யொத்த கண்கள் இமையா நின்றன!; அடிநிலத்துத் தோயும்- இவளுடைய அடிகள் தாமும் நிலத்தின்கண் தோயா நின்றன; தூமலர் வாடும்- இவளணிந்துள்ள மலர்கள் தாமும் வாடாநின்றன ஆதலின்; துயரம் எய்தி ஆயும் மனனே - துன்பமெய்தி இவள் மானிடமகளோ தேவமகளோ என்று ஐயுற்று ஆராய்கின்ற என் நெஞ்சமே கேள்!; அம்மாமுலை சுமந்து தேயும் மருங்குல் பணைபெருந்தோள் - அழகிய பெரிய வாகிய முலைகளைச் சுமந்து தேயாநின்ற இடையினையும் மூங்கில் போலும் பெரிய தோள்களையுமுடைய; இச்சிறுநுதல் அணங்கு அல்லள் - இந்தச் சிறிய நெற்றியினையுடையாள் தெய்வமகள் அல்லள் மானிடமகளே காண் என்பதாம்.

     (வி-ம்.) தில்லை காண்போர்க்குப் பேரின்பம் நல்குதலின் தலைவிக் குவமையாயிற்று. படை - வாள் முதலியன, தேவர்களுக்குக் கண்ணிமைத்தலும் அடி நிலந்தோயலும் மலர்வாடலும் இன்மையினானும், இவள் கண்ணிமைத்தலாலும் அடி நிலந்தோய்தலாலும் மலர் வாடுத