லாலும் தெய்வமகளல்லள் மானிடமகளே என்று துணிந்த படியாம், மனன்: போலி, அணங்கு - தெய்வமகள், அம் - அழகு, மருங்குல்- இடை, பணை - மூங்கில். முன்னிலையில் நிற்றலால் இச்சிறுநுதல் என்று சுட்டினான். சிறுநுதல்: அன்மொழித்தொகை. மானிடமகளே என்பது எச்சம். துயரம் எய்தி ஆயும்மனனே என்றதனால் தெளிதல் கூறப்பட்டதாம். மெய்ப்பாடு - பெருமிதம். என்னை "கல்வி தறுகண் இசைமை கொடை யெனச் சொல்லப்பட்ட பெருமித நான்கே" என்புழித் தெளிதலும் கல்வியின்பாற் படுதலின் என்க. பயன் - தெளிதல்.
|
|
செய்யுள்
45
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
நின்றறி
கல்வி யொன்றிய மாந்தர்
புனைபெருங் கவியுட் டருபொரு ளென்ன
வோங்கிப் புடைபரந் தமுதமுள் ளூறிக்
காண்குறி பெருத்துக் கச்சது கடிந்தே
யெழுத்துமணி பொன்பூ மலையென யாப்புற் |
10
|
|
றணிபெரு
முலைமேற் கோதையு மொடுங்கின
செங்கோ லரசன் முறைத்தொழில்போல
வமுதமும் கடுவும் வாளும் படைத்த
மதர்விழித் தாமரை மலர்ந்திமைத் தமர்த்தன
செய்குறை முடிப்பவர் செனனம் போலப் |
15
|
|
பதமலர்
மண்மிசைப் பற்றிப் படர்ந்தன
வமுதம் பொடித்த முழுமதி பெய்ய
முகம் வியர்ப் புறுத்தின வுள்ளமுஞ் சுழன்றன
விதழிங் தும்பையு மதியமுங் கரந்து
வளைவிலை மாக்கள் வடிவெடுத் தருளி |
20
|
|
முத்தமிழ்
நான்மறை முளைத்தருள் வாக்கால்
வீதி கூறி விதித்தமுன் வரத்தாற்
கருமுகில் விளர்ப்ப வறனீர் குளிப்பக்
கண்புதை யாப்புத் திணயிருள் விடிய
வுடறொறும் பிணித்த பாவமும் புலரக் |
25
|
|
கண்டநீள்
கதுப்பினர் கைகுவி விடித்துக்
குருகணி செறித்த தனிமுத னாயகன்
குருகு மன்னமும் வால்வளைக் குப்பையை
யண்டமும் பார்ப்பு மாமென வணைக்கும்
மலைநீர்ப் பழன முதுநகர்க் கூட |
|