திருக்கோவையார் 319 ஆம் செய்யுள்
கூதிர் கண்டு கவறல்
அஃதாவது:
தலைவன் வினைவயிற் பிரிந்தானாக; பின்னர்த் தலைவி கூதிற்பருவ வரவுகண்டு எம்பெருமான்
இப்பருவங்காரணமாக என்னை நினைந்து தாம் மேற்கொண்ட அவ்வினையை முடிக்கமாட்டார்
ஆவரோ என்று தன்னுட் கவன்று கூறியது என்பதாம். அதற்கச் செய்யுள்:-
கருப்பின மேவும் பொழிற்றில்லை
மன்னன்கண் ணாரருளால்
விருப்பின மேவச்சென் றார்க்குஞ்சென்
றல்குங்கொல் வீழ்பனிவாய்
நெருப்பின மேய்நெடு மாலெழி
றோன்றச்சென் றாங்குநின்ற
பொருப்பின மேறித் தமியரைப்
பார்க்கும் புயலினமே.
|
"இருங்கூதிர் எதிர்வுகண்டு கருங்குழலி கவலையுற்றது"
(இ-ள்)
வீழ்பனிவாய் நெருப்பு இனம்மேய் - வீழாநின்ற பனியின் குளிருக்கு அஞ்சி மாந்தரெல்லாம்
நெருப்புத்திரளைப் பொருந்தாநிற்ப; நெடுமால் எழில் தோன்றச்சென்று - நெடிய திருமாலினுடைய
அழகு தன்னைக் கண்டார்க்குக் கண்கூடாகத் தோன்றும்படி சென்று; ஆங்கு நின்ற பொருப்பு
இனம் ஏறி-எம்பெருமான் உறையும் அவ்விடத்தே நிற்கும் மலைக்கூட்டத்தின்கண் ஏறித்
தவழ்ந்து; தமியரைப் பார்க்கும் புயலினம் - துணைபிரிந்து தனித்து நிற்பாரைத் தேடும்
முகிற்கூட்டங்கள்; கருப்பினம் மேவும் பொழில் தில்லை மன்னன்கண் ஆர் அருளால் -
கரும்புத்திரள் பொருந்தும் பொழிலையுடைய தில்லையின் மன்னவனாகிய இறைவனுடைய மிக்க
அருளால்; விருப்பு இனம் மேவச் சென்றாரக்கும் - விருப்பத்தையுடைய தம்மினத்தார் தம்மால்
உதவி பெற்றுப் பொருந்தும் வண்ணம் வினைமேற் சென்றுள்ள எம்பெருமானிடத்தும்; சென்று
அல்குங்கொல் - சென்று தங்குமோ அங்ஙனம் தங்கின் அவர்நிலை என்னாம் என்பதாம்.
(வி-ம்.)
கரும்பினம் எனற்பாலது கருப்பினம் என்றாயிற்று. மேவ என்பது மெய் என மருவிற்று. நெருப்பினம்
மேவுதலாவது குளிர்க் காற்றாது நெருப்பினை அணுகி இருத்தல். நெடுமால் - நெடிய திருமால்,
முகிலுக்குத் திருமால் உவமை. ஆங்கு என்றது
|