எம்பெருமான் தங்கியிருக்கும்
அவ்விடத்தே என்பதுபட நின்றது, தமியர் - துணைவரைப் பிரிந்து தனித்துறைவோர். அல்கும்
- தங்கும், மெய்ப்பாடு - அழுகை, பயன் - அயாவுயிர்த்தல்.
|
|
செய்யுள்
46
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பசிமயல்
பிணித்த பிள்ளைவண் டாற்ற
வாசையிற் செறிந்த பொங்கர்க் குலத்தா
யருப்பு முலைக்கண் டிறந்துமிழ் மதுப்பால்
சினைமலர்த் துணைக்கரத் தன்புட னணைத்துத்
தேக்கிட வருத்தி யலர்மலர்த் தொட்டில் |
10
|
|
காப்புறத்
துயிற்றுங் கடிநகர்க் கூட
லருளுட னிறைந்த கருவுயிர் நாயகன்
குரவரும் புடுத்த வாலெயிற் றழல்விழிப்
பகுவாய்ப் பாம்பு முடங்க லாக
வாலவாய் பொதிந்த மதிமுடித் தனிமுதல் |
15
|
|
சேக்கொண்
முளரி யலர்த்திய திருவடி
கண்பரு காத களவின ருளம்போற்
காருடன் மிடைந்த குளிறுகுரற் கணமுகி
லெம்முயி ரன்றி யிடைகண் டோர்க்கு
நெஞ்சறை பெருந்துய ரோவா துடற்றக் |
|
|
கவையா
நெஞ்சமொடு பொருவினைச் சென்றோர்
கண்ணினுங் கவருங் கொல்லோ
வுண்ணிறைந் திருந்த வாழிய மனனே. |
(உரை)
கைகோள்: கற்பு. தலைவி கூற்று.
துறை: கூதிர்கண்டு
கவறல்.
(இ
- ம்.) இதனை, "அவனறி வாற்ற வறியு மாகலின்" (தொல், கற்பி. 6) எனவரும்
நூற்பாவின்கண் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் என்பதன்கண் அமைத்துகொள்க.
1
- 7: பசி . . . . . . . . . . நாயகன்
(இ-ள்)
பசிமயல் பிணித்த பிள்ளைவண்டு அரற்ற - பசியாகிய மயக்கத்தாற் கட்டுண்ட தன் பிள்ளைகளாகிய
வண்டுகள் ஆரவாரித்தலாலே; ஆசையின் செறிந்த பொங்கர் குலத்தாய்-
|