(வி-ம்.)
மது-தேன். தலைவி வருந்துதற்குக் காரணமானவற்றை விதந்து கூறித் தானும் வருந்துவாள்போல
அவள்வழி ஒழுகுவாள், சோலையும் வாய்மையும் அன்பும் மருவுதலும் போக்கும் அருக்கும் முன்னி
என்று விதந்தாள். வாய்மை-தலைவன் கூறிய சூண்மொழி. அன்பு- ஒருகாலைக்கொருகால் பெருகும்
பேரன்பு. கதுமென: குறிப்புமொழி. விரைந்து என்க. கதுமெனப் போகும் போக்கும் என விரிக்க.
அருக்கு-அருமை. நிதியின் அருக்கு-நிதி தேடுதலின் அருமை. அருமையுடைத்தாகலின் தலைவன்
வருதற்குக் காலன் நீட்டிக்கும் என்று கருதினாளாம். கலுழ்தல்-அழுதல். நொதுமலர்-அயலோர்.
நோக்கம்-கண்கள். தில்லையைக் கானாதார் பருந்துமாறு வருந்த இவட்கு வந்த ஆறு என்னோ
என விரித்தோதுக. வழியை ஆராயவே மறை வெளிப்படும்; ஏதிலாராதலின் அலர் தூற்றுவர்
என்றறிவுரைத்தாளாம். இது-இவ்வருத்தம். மலர்ப்பாவை: திருமகள். ஏந்திழை: விளி.
ஆதலால் ஆற்றியிருந்திடுக என்பது குறிப்பெச்சம். மெப்பாடு-இளிவரலைச்சார்ந்த பெருமிதம்.
பயன்-தலைமகளை ஆற்றுவித்தல்.
|
|
செய்யுள்
3
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பகையுடன்
கிடந்த நிலைபிரி வழக்கினைப்
பொருத்தலும் பிரித்தலும் பொருபகை காட்டலு
முட்பகை யமைத்தலு முணர்ந்துசொற் பொருத்தலு
மொருதொழிற் கிருபகை தீராது வளர்த்தலுஞ்
செய்யா வமைச்சுடன் சேரா வரச |
10
|
|
னோடு
கரிந்தன்ன காடுகடந் தியங்கி
யிடும்பை நிரப்பினார்க் கீதலி னிறந்தோர்க்
கிதழ்நிறை மதுவந் தாமரை துளித்தென
விழிசொரி நீருடன் பழங்கண் கொண்டா
லுலகிய னிறுத்தும் பொருண்மர பொடுங்க |
15
|
|
மாறனும்
புலவரு மயங்குறு காலை
முந்துறும் பெருமறை முளைத்தருள் வாக்கா
லன்பினை திணையென் றறுபது சூத்திரங்
கடலமு தெடுத்துக் கரையில்வைத் ததுபோற்
பரப்பின் றமிழைச்சுவை திரட்டிமற் றவர்க்குத் |
|
|
தெளிதரக்
கொடுத்த தென்றமிழ்க் கடவுள்
தழற்கட் டரக்கின் சரும வாடையன்
கூடலம் பெரும்பதி கூறார் கிளையென |
|