372கல்லாடம்[செய்யுள்47]



என்க. கார் வரவே எம்பெருமான் தேரும் வரும் என என்வரவினை எதிர்பார்த்து உயிர்தாங்கி இருப்பவள் என்னையன்றி நீ முற்படின் எற்காணாது உயிர்விடுதலுங் கூடும் என்பான், என்னின் முன்னேல் என்றான். முதுவோர் - முதுபெண்டிர். தனித்துறையும் மகளிர்க்கு ஆறுதல் செய்தற்கு முதுபெண்டிர் இல்லுறை கடவுளுக்குப் பூசனை செய்தல் மரவு. வாள் - ஒளி. செல்லல் - துன்பம். விரை - மணம். மலரும் நெல்லுந் தூவி வழிபடுதல் மரபு. இதனை,

"யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு
 நாழி கொண்ட நறுவீ முல்லை
 அரும்பவிழ் அலரி தூஉய்க்கை கொழுது
 பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப"
                     (பத்துப் பாட்டு, முல்லைப். 8-11)

எனவரும் முல்லைப் பாட்டானும் உணர்க. இனி இதனால் விரைமலர் தூய் நெற்படு வான்பலி செய்தயராநிற்கம் என்பதற்குப் பலி கொடுத்து விரிச்சியயராநிற்கும் எனினும் அமைதலுணர்க. மெய்ப் பாடு - அச்சம். பயன் - பாகன் தேரை விரைந்தூர்தல்.

 
 

செய்யுள் 47

நேரிசையாசிரியப்பா

 
   
5
  கருங்குழற் செவ்வாய்ச் சிற்றிடை மடந்தைக்
குளத்துய ரீந்து கண்டுயில் வாங்கிய
வானா வின்ன லழிபடக் காண்பான்
விரிபொரி சிந்தி மணமலர் பரப்பித்
தெய்வக் குலப்புகை விண்ணோடும் விம்ம
10
  விருநாற் றிசையு முண்பலி தூவி
நானூன் மாக்க ணணிக்குறி சொற்றுப்
பக்கஞ் சூழ்ந்த நெடுநகர் முன்றிற்
கோடகழ்ந் தெடுத்த மறிநீர்க் காலும்
வெண்கார் பெய்யு நாள்குறித் துழுநருஞ்
15
  சூனிறைந் துளையுஞ் சுரிவளைச் சாற்று
மினக்கய லுண்ணுங் களிக்குரு கினமும்
வரைப்பறை யரிந்த வாசவற் றொழுது
நிரைநிரை விளம்பி வழிமுடி நடுநரு
நாறுகழி துற்ற சகடீர்க் குநருந்
  தாமரை பாடு மறுகாற் கிளியு
முறைத்தெறி கம்பலை யும்பரைத் தாவி
முடித்தலை முடிர்ப்ப வடிக்கடி கொடுக்கு