திருக்கோவையார் 115 ஆம் செய்யுள்
தழைவிருப்புரைத்தல்
அஃதாவது:
தலைவியைத் தழையேற்பித்துத் தோழி தலைவன்பாற் சென்று ஐயா! நீதந்த தழையை யான்
எம்பெருமாட்டிபாற் சென்று கொடுத்தேன். அதனை ஏற்றுக்கொண்டு அவள் செய்ததனைச் சொல்லிற்
பெருகும் என்று தலைவியினது விருப்பத்தை அவனுக்குக் கூறாநிற்றல் என்பதாம். அதற்குச்
செய்யுள்:-
பாசத்
தளையறுத் தாண்டுகொண்
டோன்றில்லை யம்பலஞ்சூழ்
தேசத் தனசெம்ம னீதந்
தனசென் றியான்கொடுத்தேன்
பேசிற் பெருகுஞ் சுருங்கு
மருங்குல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிலளன்றிச் செய்யா
தனவில்லை பூந்தழையே.
|
விருப்பவள் தோழி பொருப்பற் குரைத்தது.
(இ-ள்)
செம்மல் நீதந்தன - பெருமானே நின்னால் வழங்கப்பட்ட தழைகள்; பாசத்தளை அறுத்து
- அன்பர்களுடைய பாசமாகிய தளையினை அறத்து; ஆண்டு கொண்டோன் தில்லை அம்பலம் சூழ்
தேசத்தன - தனக்கே தொண்டு செய்யும்படி அடிமை கொண்டவனாகிய இறைவன் எழுந்தருளியுள்ள
தில்லைத் திருச்சிற்றம்பலத்தைச் சூழ்ந்துள்ள பொழிலின்கண் உள்ளவை; நீ தந்தன
- அவற்றிற்கு இயல்பாக உள்ள அச்சிறப்பே யல்லாமலும் நின்னாலும் வழங்கப்பட்டன;
சென்று யான்கொடுத்தேன்- அவற்றை யான் சென்று எம்பெருமாட்டியின்பாற் கொடுத்தேன்
- அவற்றை யான் சென்று எம்பெருமாட்டியின்பாற் கொடுத்தேன், அங்ஙனம் கொடுத்தவுடன்;
பேசில் பெருகும் - அங்கு நிகழ்ந்தனவற்றை யான் சொல்லுவேனாயின் மிகவும் விரியும்;
சுருங்கு மருங்குல் - நுணுகிய இடையினையுடைய எம்பெருமாட்டி; பூந்தழை-மலரோடு வடிய அத்தழையை;
அரைத்துப் பூசிற்றிலள் - சாந்தாக அரைத்துத் தன் மேனி யெங்கும் பூசிக் கொண்மாள்
இல்லை அதுவே குறை; அன்றிப் பெயர்ந்து செய்யாதன இல்லை - அதுவே யன்றி அவள் அத்தழையினை
மீண்டும் செய்யாத செயல்கள் இல்லை என்பதாம்.
(வி-ம்.)
பாசம் - பற்று. தளை - கட்டு. அடியாரின் பாசத்தளை அறுத்து ஆண்டு கொண்டோன் என்க.
தேசம் - இடம்; ஆகுபெயராய்க் கொழிலைக் குறித்து நின்றது. நீ தந்த தழை அம்பலம்
சூழ்ந்த
|