378கல்லாடம்[செய்யுள்48]



பொழிலிடத்தன. ஆகவே அவை இயல்பாகவே சிறப்புடையன என்பது கருத்து. நீ தந்தன என்பதனைப் பின்னரும் எடுத்தோதிப் பெருங்காதலுடைய நின்னால் வழங்கப்பட்ட சிறப்பினையுமுடையன என்பது கருத்தாகக் கொள்க. சுருங்கு மருங்குல்: அன்மொழித் தொகை இனி எம்பெருமாட்டி அத்தழையைத் தன் சுருங்கும் மருங்குலில் உடுத்தனள். அதனைப் பெயர்த்து அரைத்துப் பூசிற்றிலள் அவ்வளவே எனினுமாம். பெயர்த்து என்பது பெயர்ந்து என மெலிந்தது. அன்றிச் செய்யாதன இல்லை எனவே அவள் அத்தழையினை மோந்தனள்; முலைவைத்து உற முயங்கினள்; ஒளிர் நன்னீர் நீக்கி நிறை கண்ணிணை ததும்ப நெடு நீள நோக்கினள்; நுவலக் கருதினள்; ஆனால் ஒன்றும் நுவல்கிலாள் மேக்கு நிமிர் விம்மலுற்றனள் காண் என்றாளாயிற்று. பிசைந்தரைத்தென்றும் பாடம். மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைவனை ஆற்றுவித்தல்.

 
 

செய்யுள் 48

நேரிசையாசிரியப்பா

 
   
5
  அறுகுந் தும்பையு மணிந்தசெஞ் சடையுங்
கலைமான் கணிச்சியுங் கட்டிய வரவமும்
பிறவுங் கரந்தொரு கானவ னாகி
யருச்சுன னருந்தவ மழித்தமர் செய்தவன்
கொடுமரத் தழும்பு திருமுடிக் கணிந்து
10
  பொன்னுடை யாவந் தொலையாது சுரக்கப்
பாசுப தக்கணை பரிந்தருள் செய்தேன்
வாசவன் மகட்புணர்ந்து மூன்றெரி வாழத்
தென்கட னடுத்திடர் செய்துறைந் திமையவ
ரூருடைத் துண்ணுஞ் சூருட றுணித்த
15
  மணிவேற் குமரன் களிமகிழ் செய்த
பேரருட் குன்ற மொருபாற் பொலிந்த
வறப்பெருங் கூடற் பிறைச்சடைப் பெருமான்
றிருவடிப் பொருந்தேன் பருகுநர் போல
மணமுடன் பொதுளிய வாடா மலர்த்தழை
20
  யொருநீ விடுத்தனை யானவை கொடுத்தன
னவ்வழி கூறி னத்தழை வந்து
கண்மலர் கவர்ந்துங் கைம்மலர் குவித்து
நெட்டுயிர்ப் பெறிய முலைமுக நெருக்கியு
மூடியும் வணங்கியு முவந்தளி கூறியும்
  பொறையழி காட்சிய ளாகி
நிறையழிந் தவட்கு நீயா யினவே.