மூலமும் உரையும்383



முன்னிலை ஒருமை எதிர்மறை வினைமுற்று, நேரிழை; அன்மொழித் தொகை. அம்பலத்தான் சேய் என்றது முரகனை. அலவன் - நண்டு. சீர் - அழகு. நாவற்கனிக்கு வண்டு உவமை. இங்ஙனம் நங்காதலிக்கு யாம் வழங்க வாய்ப்பில்லையே என்று கருதி நெஞ்சம் மாறுபட்டு நின்றான் என்பது குறிப்பு. பெருந்தகை: அன்மொழித்தொகை. சேய் கண்டனையனாகிய அப்பெருந்தகை என்றவாறு. பேய்கண்டனைய தென்பதற்குப் ேபெயைக் கண்டாற் போல்வதொரு வேறுபாடென்க. பேய்கண்டனைய தொன்றையுடையனாய் என்னாது, ஒற்றுமை நயம் பற்றி ஒன்றாகி என்றாள். நாவற்கனியை நனி நல்கக்கண்டு தன்னுணர் வொழியப் பொயினான் இன்று வந்திலன் என்னாது பேய்கண்டனைய தொன்றாகி நின்றான் என்று கூறினமையான் மென்மொழியும் பேய்கண்டனைய தென்றதனால் வன்மொழியும் விரவிய தாயிற்று, மெய்ப்பாடு: இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன் - தலைவியை மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல்.

 
 

செய்யுள் 49

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வியரமு தரும்பி முயற்கண் கறுத்துத்
தண்ணநின் றுதவலி னிறைமதி யாகிப்
பொன்னம் பொகுட்டுத் தாமரை குவித்து
நிறையளி புரக்கும் புதுமுகத் தணங்குநின்
னொளிவளர் நோக்க முற்றனை யாயி
10
  னின்னுயிர் வாழ்க்கை யுடலொடும் புரக்கலை
யொருதனி யடியாற் குதவுதல் வேண்டி
மண்ணவர் காண வட்டணை வாளெடுத்
தாதி சாரணை யடர்நிலைப் பார்வை
வாளுட னெருக்கன் மார்பொடு முனைதல்
15
  பற்றிநின் றடர்த்த லுட்கையின் முறித்த
லானனத் தொட்ட லணிமயிற் புரோக
முட்கலந் தெடுத்த லொசிந்திட மழைத்தல்
கையொடு கட்டல் கடித்துள் ளழைத்தலென்
றிவ்வகைப் பிறவு மெதிரம ரேறி
20
  யவன்பகை முறித்த வருட்பெருங் கடவுள்
கூடலங் கானற் பெடையுடன் புல்லிச்
சேவ லன்னந் திருமலர்க் கள்ளினை
யம்மலர் வள்ள மாகநின் றுதவுதல்
கண்டுகண் டொருவன் மாழ்கி
  விண்டுயிர் சேர்ந்த குறிநிலை மயக்கே.