மூலமும் உரையும்387



திருக்கோவையார் 389 ஆம் செய்யுள்
ஊடறணிவித்தல்

     அஃதாவது: தலைவன் தன் பரத்தமை காரணமாகத் தன்னோடூடியிருந்த தலைவியின் ஊடல் தீர்த்தற் பொருட்டு விருந்தோடு சென்றானாக, விருந்துகண்ட தலைவி விருந்தோற்றுக் கொண்டனள். அதன்பின்னர்த் தலைவன் பின்னும் அவள் ஊடல் தணித்தற்கு மகவினை ஏந்திச் சென்றான். அதுகண்ட தோழி தலைவியின்பாற் சென்று இனி நீ ஊடியிருத்தல் அடாது. நம்பெருமான் தனக்குத் துணையாக நந்தோன்றலைக் கைப்பற்றிக் கொண்டு வந்தனன். ஆதலால் இனி நீ ஊடுதல் எங்ஙனம் நின் கவலையை விடுத்து நம்பெருமானுக்குக் குற்றேவல் செய்வாயாக! என்று அவள் ஊடலைத் தணிவியாநிற்றல். அதற்குச் செய்யுள்:-

கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக்
     காட்டியை யாட்டுவந்த
தவலங் கிலாச்சிவன் றில்லையன்
     னாய்தழு விம்முழுவிச்
சுவலங் கிருந்தநந் தோன்ற
     றுணையெனத் தொன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற்
     பாலை யரசனுக்கே.

"தோன்றலைத் துணையொடு தோழி கண்டு வான்றகை மடந்தையை வருத்தந் தணித்தது"

     (இ-ள்) கவலங்கொள் பேய்த்தொகை பாய்தர - கவலை கொள்ளுதற்கேதுவாகிய பேய்கூட்டங்கள் கூத்தாடாநிற்ப; காட்டிடை ஆட்டு உவந்த-சுடுகாட்டின்கண் ஆடுதலை விரும்பிய; தவல் அங்கு இலாச்சிவன் தில்லை அன்னாய்-கேடு தன்னிடத்தே இல்லாத சிவபெருமானுடைய தில்லையம்பதியை நிகர்த்த பெருமாட்டியே! கேள்; தழுவி முழுவி சுவல் அங்கு இருந்த - தழுவி முத்தங்கொண்டு பிடரிடத்தில் எறியிருந்த; நம் தோன்றல் துணை எனத் தோன்றுதலால் - நம்முடைய குழந்தையைத் தமக்குத் துணையென்று கருதி வந்து நம்பெருமான் நம்முன் தோன்றுதலாலே; அவலங் களைந்து அரசனுக்குப் பணிசெயற் பாலை - நினது உள்ளத்துக் கவலையை நீக்கி இனி நீ நம்பெருமானுக்குக் குற்றேவல் செய்யத் தகுந்தவளாயினை என்பதாம்.

     (வி-ம்.) கவலம் - கவலை. காண்போர் கவலைப்படுதற்குக் காரணமான பேய் என்றவாறு, பாய்தல் - தலை கீழும் கால் மேலுமாகச் சுழலத் தாவிக் குதித்தல். காடு- சுடுகாடு. ஆட்டு - ஆடல். தவல்-