388கல்லாடம்[செய்யுள்50]



கேடு. தவலிலாத்தில்லை என்க. முழுவி - முத்தங்கொண்டு. சுவல்பிடர். தோன்றல்- மகவு. அவலம் - துன்பம். அரசன் - ஈண்டுத் தலைவன். மெய்ப்பாடு - பெருமிதம். பயன்ள - தலைவியின் ஊடல் தணிவித்தல்.

 
 

செய்யுள் 50

நேரிசையாசிரியப்பா

 
   
5
  அவ்வுழி யவ்வுழிப் பெய்யுண வுன்னி
முகன்றரு மிருசெய லகன்பெறக் கொளுவும்
புல்லப் பாண்மகன் கில்லையு மின்றி
யின்பக் கிளவி யன்பினர்ப் போக்கி
முடித்தலை மன்ர்செருக்குநிலை யொருவிப்
10
  பொன்னுறு ஞாழற் பூவுடன் கடுக்கும்
பேழ்வாய்ப் புலியுகிர் சிறுகுறல் விளங்க
வமுதந் துளிக்குங் குமுதவாய் குதட்டிப்
பழங்கொ டத்தை வழங்குசொற் போலு
மழலைக் கிளவியு மிருநிலத் தின்பமு
15
  மொருவழி யளிக்கு மிருங்கதிச் சிறுவனைத்
தழல்விழி மடங்கற் கொலையரிக் குருளையைப்
பொன்மலை கண்ட பொலிவு போல
மணிகெழுமார்பகத் தணிபெறப் புகுத்தலிற்
கறங்கிசை யருவி யறைந்துநிமிர் திவலையுந்
20
  துருத்திவா யதுக்கிய குங்குமக் காண்டமுங்
குறமகார் கொழிக்குங் கழைநித் திலமு
நெடுநிலை யரங்கிற் பரிபெறு தரளமும்
புனம்பட வெறிந்த காரகிற் றூமமு
மந்தணர் பெருக்கிய செந்தீப் புகையும்
25
  வேங்கையின் றாதுடன் விரும்பிய சுரும்புங்
கந்திவிரி படிந்த மென்சிறை வண்டுஞ்
சந்தனப் பொங்கர்த் தழைசிறை மயிலு
முன்றிலம் பெண்ணைக் குடம்பைகொ ளன்றிலு
மொன்றினோ டொன்று சென்றுதலை மயங்குங்
  குழகன் குன்றக் கூடலம் பதிநிறை
மஞ்சடை குழற்பெறு செஞ்சடைப் பெருமா
னருந்தமிழ்க் கீரன் பெருந்தமிழ்ப் பனுவல்