தீருக்கோவையார் 100 ஆம் செய்யுள்
குலமுறை கூறி மறுத்தல்
அஃதாவது:
தோழியை மதியுடம்படுத்து நீ தலைவியின்பாற் சென்று என்குறை கூறி அவளை நயப்பித்திடுக!
என்று வேண்டிய அத்தலைவனை நோக்கி நின்குறையை நீயே அவள்பாற் சென்று கூறுக என்று கூறக்
கேட்ட தலைவன் பெரிதும் ஆற்றாது நிற்ப, அதுகண்டிரங்கிய தோழி நீ யிர் பெரியீர்!
யாஞ் சிறியோம்! ஆதலால் எம்மை நீர் குறை வேண்டலும், யான் தலைவியைக் குறை நயப்பித்தலும்
தகுதியன்று! என்று உலக வழக்குக் கூறி மறுத்துரைத்தல் என்பதாம். அதற்குச் செய்யுள்:-
தெங்கம் பழங்கமு
கின்குலை
சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத் தொளிர்குளிர்
நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றிற்
குன்றன்ன மாபதைப்பச்
சிங்கந் திரிதரு சீறூர்ச்
சிறுமியேந் தேமொழியே.
|
"தொழுகுலத்தீர் சொற்காகேம் இழிகுலத்தே மெனவுரைத்தது"
(இ-ள்)
தெங்கம்பழம் கமுகின் குலைசாடி - மூக்கூழ்த்து விழுகின்ற தெங்கம்பழம் கமுகினது கலை
உதிரும்படி மோதி; கதலி செற்று - வாழைகளை முறித்து; கொங்குஅம் பழனத்து ஒளிர்குளிர்
நாட்டினை நீ-பூந்துகளையுடைய கழனிகளிலே கிடந்து விளங்குதற் கிடனான குளிர்ந்த மருதவைப்பின்கண்
உள்ளாய் நீ; எம் தேமொழி - எம்முடைய இனிய மொழியினையுடைய பெருமாட்டியோ; உமைகூர்
பங்கு அம்பலவன் பரங்குன்றில் - உமாதேவியார் சிறந்த ஒரு பாகத்தையுடைய அம்பலவாணனது
திருப்பரங்குன்றின்கண்; குன்று அன்ன மாபதைப்ப சிங்கம் திரிதரும் சீறூர்ச் சிறுமி-
மலையையொத்த யானைகள் நடுங்கும்படி சிங்கங்கள் வேட்டையாடித் திரிகின்ற சீறூரின்கண்
வாழ்பவள் மேலும் ஒரு சிறுமி. அதனால் எம்மோடு நீ சொல்லாடுதல் தகாது என்பதாம்.
(வி-ம்.)
அதனால் எம்மொடு நீ சொல்லாடுதல் தகாது என்பது குறிப்பெச்சம். தெங்கம்பழம் - தென்னை
நெற்று. கதலி - வாழை. கொங்கு - பூந்துகள். பழனம்- கழனி. குளிர்நாடு - வேந்தன்
மேய தீம்புனலுகம். அஃதாவது மருத வைப்பு. தேமொழி: அன்மொழித்
|