402கல்லாடம்[செய்யுள்52]



வீப்பான் - அழிப்பவன். விரிநீர்: அன்மொழித்தொகை; கடல் நமர் என்றது தலைவனை, பூப்பால் நலம் - பூவின்கண் உண்டாகும் நறுமணமாகிய நன்மை. உலகங்காத்தலாவது தன் வினைசெய்வாரானும் ளன்வரானும் பகைவரானும் உயிர்லகட்கு வரும் அச்சத்தை நீக்குதல், மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்- தலைவியை ஆற்றுவித்தல்.

 
 

செய்யுள் 52

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நடைத்திரைப் பரவை நாற்கட லணைத்து
வரையறுத் தமைந்த வகைநான் காக
விதிவரத் திருத்திய மேதினிப் பொறையைக்
குருமணி விரித்தலிற் றேனொடு கிடந்து
மாயாது தொடுத்த மணமலர் சுமத்தலின்
10
  வரையென நிறுத்திய திருவுறை பெருந்தோ
டரித்து மணைத்துந் தானெனக் கண்டுஞ்
செய்தது மன்றித் திருமனம் பணைத்துக்
காக்கவும் குரிசில் கருத்துறும் போலும்
விடையா வடந்தைசெய் வெள்ளியஞ் சிலம்பினுந்
15
  தென்கால் விடுக்குஞ் செம்பிற் பொருப்பினுங்
கொண்டல்வந் துலவு நீலக் குவட்டினுங்
கோடைசென் றுடற்றுங் கொல்லிக் கிரியினும்
பிறந்தவர் விறவாப் பெரும்பதி யகத்து
முடிந்தவர் முடியா மூதூ ரிடத்துங்
20
  கண்டவர் காணாக் காட்சிசெய் நகரினும்
வேதத் தலையினும் விதியாக மத்தினுங்
கல்விய ருளத்துங் கவர்நெஞ் சகத்துந்
தெய்வம் விடுத்துப் பொய்கொள்சிந் தையினுங்
கொலையினர் கண்ணுங் குன்றா தியைந்து
25
  வெளியுறத் தோன்றி யிருளுற மறைந்த
விஞ்சைவந் தருளிய நஞ்சணி மிடற்றோன்
சந்தமும் பதமுஞ் சருக்கமு மடக்கமுஞ்
சின்னக் குறளுஞ் செழுங்கார் போலப்
பெருமறை முழுங்குந் திருநகர்க் கூட
  லொப்புற் றடைமலர் சுமந்த
மைப்புறக் கூந்தற் கொடிவணங் கிடையே.