408கல்லாடம்[செய்யுள்53]



துவளுற்றது என்பது அழிந்தது என்பதுபட நின்றது. எல்லாம் என்றது முழுதுமென்னும் பொருள்பட நிற்பதோர் உரிச்சொல். மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைவியை மகிழ்வத்தல்.

 
 

செய்யுள் 53

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நுனிக்கவி னிறைந்த திருப்பெரு வடிவின
ளுயிர்வைத் துடல முழுன்றன போல
நெடும்பொரு ளீட்ட நிற்பிரிந் திறந்து
கொன்றுண லஞ்சாக் குறியினர் போகுங்
கடுஞ்சுரந் தந்த கல்லதர் வெப்பந்
10
  தேவர் மருந்துந் தென்றமிழ்ச் சுவையு
மென்னுயிர் யாவையு மிட்டைத் தேந்திக்
குருவியுங் குன்றுங் குரும்பையும் வெறுத்தநின்
பெருமுலை மூழ்கவென் னுளத்தினிற் றொடாமுன்
வீழ்சுற் றொழுக்கிய பராரைத் திருவடக்
15
  குளிர்நிழ லிருந்து குணச்செயன் மூன்று
முடலொடு படரு நிலைநிழல் போல
நீங்காப் பவத்தொகை நிகழ்முத னான்கு
முடனிறைந் தொழியா வுட்பகை யைந்து
மதிஞரிற் பழித்த வடுவிரு மூன்று
20
  மணுகா தகற்றிப் பணிமுனி நால்வர்க்
கறமுத னான்கும் பெறவருள் செய்த
கூடற் பெருமா னீடருண் மூழ்கி
யிருபத முள்வைத் திருந்தவர் வினைபோற்
போயின துனைவினை நோக்கி
  யேகின வெனக்கே யற்புதந் தருமே.

(உரை)
கைகோள் : கற்பு. தலைவன் கூற்று

துறை: உண்மகிழ்ந்துரைத்தல்.

     (இ-ம்.) இதனைக் "கரணத்தினமைந்து முடிந்த காலை . . . . . கிழவோன் மேன" (தொல். கற்பி. 5) எனவரும் நூற்பாவின்கண் 'எண்ணரும்சிறப்பு' என்பதன்கண் அமைத்துக் கொள்க.