மூலமும் உரையும்413



 
 

செய்யுள் 54

நேரிசையாசிரியப்பா

 
   
5
  கொன்றையந் துணரிற் செவ்வழி குறித்தும்
வாலுழை யெருக்கில் வளருழை பாடியுங்
கூவிளங் கண்ணியிற் குலக்கிளை முரற்றியும்
வெண்கூ தளத்தின் விளாரிநின் றிசைத்தும்
வண்டுந் தேனு ஞிமிறுஞ் சுரும்பு
10
  முமிழ்நற வருந்தி யுறங்குசெஞ் சடையோன்
மதுமலர் பறித்துத் திருவடி நிறைத்த
நான்மறைப் பாலனை நலந்துயிர் கவருங்
காலனைக் காய்ந்த காலினன் கூடற்
றிருமருங் கணைந்து வருபுனல் வையை
15
  வரையுரண் டென்னத் திரைநிரை துறையகத்
தணந்தெடுத் தேந்திய வரும்புமுகிழ் முலையோண்
மதிநுதற் பெருமதி மலர்முகத் தொருத்தியை
யாட்டியு மணைத்துங் வட்டியுங் குலவியு
மேந்தியு மெடுத்து மொழுக்கியு மீர்த்து
20
  முழக்கியுந் தபுத்தியு முலையொளி நோக்கியும்
விளிமொழி யோற்றும் விதலையிற் றிளைத்தும்
பூசியும் புனைந்தும் பூட்டியுஞ் சூட்டியு
நிறுத்தியு நிறைத்து நெறித்துஞ் செறித்து
மெழுதியுந் தப்பியு மியைத்தும் பிணித்துங்
25
  கட்டியுங் கலத்தியுங் கமழ்த்தியு மறைத்துச்
செய்தன வெல்லாஞ் செய்யலர் போலவென்
னெட்டிலை பொலிந்தபொன் னிறைதிரு வுறையுளிற்
பாசடைக் குவளைச் சுழன்மணக் காட்டினைக்
கருவரிச் செங்கண் வராலினங் கலக்க
30
  வெரியலர் முண்டகத் தடவிதிக் கெறிய
வெள்ளுடற் கருங்கட் கயனிரை யுகைப்ப
மரகதப் பன்னத் தாம்பலங் குப்பையைச்
சொரியெயிற்றுப் பேழ்வாய் வாளைக டுவைப்பப்
படிந்துசே டெறியுஞ் செங்கட் கவரியு
  மலைசூழ் கிடந்த பெருங்குலைப் பரப்பை
மலைகொடு மலைந்த முதுநீர் வெள்ளமு