மூலமும் உரையும்419



திருக்கோவையார் ஆம் செய்யுள்
தன்னை வியந்துரைத்தல்

     அஃதாவது: ஒரு பரத்தையின் தோழிமார் தலைவன் வேறு பரத்தை மகளிர் இல்லிற்கேகா வண்ணம் முன்னுறக் காப்பேம் என்று தம்முட் கூறுவதனைக் கேட்டுச் செருக்குற்ற அப்பரத்தை அத்தோழிமாரை நோக்கித் தோழியீர்! யான் நம் பெருமானை வேறு பரத்தையர் பாற் செல்லாவண்ணம் தகைக்க வல்லேன் அல்லேனாயின் பின்னர் யான் இவனை என்பால் தந்து அழாநின்ற இவன் மனைவியை ஒப்பேன் இல்லனோ என்று தன்னை வியந்து கூறாநிற்றல் என்றவாறு.

கனலூர் கணைதுணை யூர்கெடச்
     செற்றசிற் றம்பலத்தெம்
மனலூர் சடையோ னருள்பெற்
     றவரின் அமரப்புல்லு
மினலூர் நகையவர் தம்பா
     லருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப்பிரி யும்புன
     லூர்கணப் பூங்கொடியே.

"அரத்தத் துவர்வாய்ப் பரத்தைத் தலைவி முனிவு தோன்ற நனிபு கன்றது"

     (இ-ள்) கனல் ஊர் கணை துணை ஊர் கெடச் செற்ற-தீப்பரவுதற்குக் காரணமான அம்பினாலே தம்முள் ஒத்த திரிபுரங்கள் அழியும்படி வெகுண்ட; சிற்றம்பலத்து எம் அனல் ஊர் சடையோன் அருள் பெற்றவரின் - தில்லைத் திருச்சிற்றம்பலத் தின்கண் இன்பக் கூத்தாடா நின்ற எம்முடைய தீயை யொத்த சடையையுடைய சிவபெருமானுடைய திருவருளைப் பெற்ற மெய்யடியார் போலச் செம்மாந்து; அமரப்புல்லும் மினல் ஊர் நகையவர் தம்பால் அருள் விலக்காவிடின் - அவனைப் பொருந்தத் தழுவா நின்ற ஒளி பரவிய நகையையுடைய வேறு பரத்தை மகளிரிடத்து அவன் அருள் செல்லாதபடி விலக்க வல்லேன் அல்லேனாயின்; யான் புனல் ஊரனைப் பிரியும் புனல் ஊர்கண் அப் பூங்கொடி - யான் நீர்வளமிக்க ஊரினையுடைய நம்பெருமானைப் பிரிந்திருக்கும் நீர் துளிக்கும் கண்களையுடைய அவன் மனைக் கிழத்தியாகிய அப்பூங் கொடியை யொத்தவளே ஆவேனல்லனோ என்றவாறு.

     (வி-ம்.) கணைத்துணை எனற்பாலது செய்யுளின்பநோக்கி மிகாது நின்றது. கணை என்பதனை எழுவாயாக்கி உரைப்பாரு முளர். இதன் கண் பரத்தை தோழிமாரை நோக்கித் தோழியீர்! யான் என் நலத்தா