|
|
செய்யுள்
55
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
விடங்கொதித்
துமிழும் படங்கெழு பகுவாய்க்
கண்டன்முண் முளைத்த கடியெயிற் றரவக்
குழுவினுக் குடைந்து குளிர்மதி யொதுங்கத்
தெய்வப் பிறையிருந்த திருநதற் பேதையைக்
கண்டுகண் டரவ மயிலெனக் கலங்க |
10
|
|
நெடுஞ்சடைக்
காட்டினை யடுந்தீக் கொழுந்தெனத்
தலையே தலையா நகுதலை தயங்க
வணதிலை மாலையை நிறைமதித் திரளெனப்
புடைபுடை யொதுங்கி யரவுவாய் பிளப்ப
வொன்றினுக் கொன்று துன்றிய நடுக்கொடு |
15
|
|
கிடந்தொளி
பிறழு நெடுஞ்சடைப் பெருமான்
படைநான் குடன்று பஞ்சவற் றுரந்து
மதுரை வவ்விய கருநடர் வேந்த
னருகர்ச் சார்ந்துநின் றரன்பணி யடைப்ப
மற்றவன் றன்னை நெடுந்துயில் வருத்தி |
20
|
|
யிறையவன்
குலத்து முறையரின் மையினாற்
குருதித் தாரை கல்லொடு பிறங்க
மெய்யணி யளறாக் கைம்முழந் தேய்த்த
பேரன் புருவப் பசுக்கா வலனை
யுலகினிற் றமது முக்குறி யாக |
25
|
|
மணிமுடி
வேணியு முருத்திரக் கலனு
நிலவுமிழ் புண்ணியப் பானிறச் சாந்தமு
மணிவித் தருள்கொடுத் தரச னாக்கி
யடுமா லகற்றி நெடுநாள் புரக்க
வையக மளித்த மணியொளிக் கடவு |
|
|
ணெடுமதிற்
கூடல் விரிபுனல் வையையுட் |