426கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 396 ஆம் செய்யுள்
புதல்வன் மேல்வைத்துப் புலவிதீர்தல்

     அஃதாவது: தலைவன் ஓடியிருந்தாளை ஊடல் தீர்த்துக் கூடிப் பிரிந்த வழி, பின்னும் அவன் பரத்தைமாட்டுப் பிரிந்தான் என்று கேள்வியுற்றுத் தலைவி வாயில் மறுத்தாளாக; அது கண்ட தலைவன் முன்றிலில் விளையாடுகின்ற மகனை எடுத்தணைத்துத் தம்பல மிட்டு முத்தங் கொடுத்து அது வாயிலாகக் கொண்டு அப்புதல்வனோடு தலைவியை அணுக, அது கண்ட தலைவி அம்மகனை வாங்கி அணைத்துக் கொண்டு, அவன் வாயிற்றம்பலம் தன் மெய்யிற் படுதலால் ஏடா! நீ எல்லார்க்கும் பொதுவாகிய தம்பலத்தைக் கொண்டுவந்து எம்மைக் கொண்டாடுவது தகதியன்று, அது கிடக்க, இதனை நினக்குத் தந்தவாறு சொல்லுவாயாக!, எனக் கூறி அவன் வாயிலாகப் புலவி தீரா நிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்கை
     மார்களைக் கண்பிழைப்பித்
தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித்
     தானிமை யோரிறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை
     யீசர்வண் டில்லைநல்லார்
பொதுத்தம் பலங்கொணர்ந் தோபுதல்வா
     வெம்மைப் பூசிப்பதே.

புதல்வனது திறம்புகன்று மதரரிக்கண்ணி வாட்டந் தவிர்ந்தது.

     (இ-ள்) புதல்வா - மகனே! நீ; மதுத் தங்கிய கொன்றை வார்சடையீசர் - தேன் தங்கிய கொன்றைப் பூவையுடைய நீண்ட கடையையுடைய இறைவனுடைய; இமையோர் இறைஞ்சும் வள்தில்லை நல்லார் பொதுத் தம்பலம் கொணர்ந்தோ- தேவர்களானும் வணங்கப்படும் வளமுடைய தில்லையின்கண் உள்ள மகளிர் எல்லார்க்கும் பொதுவாகிய தம்பலத்தைக் கொண்டுவந்து தானோ; எம்மைப் பூசிப்பது- எம்மைக் கொண்டாடுவது அது நிற்க; கதிர்த்த நகை மன்னும் சிற்றவ்வைமார்களைக் கண்பிழைப்பித்து - நின்தந்தை இத் தம்பலத்தை நினக்குத் தருகின்ற பொழுது ஒளிவிட்ட முறுவல் பொருந்திய நின் சிற்றன்னைமார் கண்ணைத் தப்புவித்து; எதிர்த்து எங்கு நின்று எப் பரிசு அளித்தான் - அவர் காணாதபடி நின்னை எதிர்ப்பட்டு எவ்விடத்து நின்று எவ்வண்ணம் இதனை நினக்குத் தந்தான். நீ இது சொல்ல வேண்டும்! என்க.