மூலமும் உரையும்427



     (வி-ம்.) நகை - முறுவல். சிற்றவ்வை - தசிற்றன்னை. கண் பிழைப்பித்தல்- காணாதபடி செய்தல். நின்னை அவன் எதிர்ப்படுதல் கண்டாலும் அவர் அவனைக் காய்வர் என்பாள் எதிர்த்து எங்கு நின்று எப்பரிசு அளித்தான் என்றாள். இமையோர்- தேவர். நல்லார் என்றது பரத்தைமாரை; இகழ்ச்சி. தம்பலம் - வெற்றிலை, பாக்கு முதலிய பொருள்களை மென்றதனால் உண்டாகும் சாறு. மெய்ப்பாடு - இளிவரலைச் சார்ந்த நகை. பயன்-ஊடல் தீர்தல்.

 
 

செய்யுள் 56

நேரிசையாசிரியப்பா

 
   
5
  அடியவ ருளத்திரு ளகற்றலின் விளக்கு
மெழுமலை பொடித்தலி னனறெறு மசனியுங்
கருங்கடல் கடித்தலிற் பெருந்தழற் கொழுந்து
மாவுயிர் வௌவலிற் றீவிழிக் கூற்று
மென்னுள மிருத்தலி னியைந்துண ருயிரு
10
  நச்சின கொடுத்தலி னளிர்தரு வைந்துங்
கருவழி நீக்கலி னுயர்நிலைக் குருவு
மிருநிலங் காத்தலின் மதியுடை வேந்து
மாகிய மணிவேற் சேவலங் கொடியோன்
வானக மங்கையுந் தேன்வரை வள்ளியு
15
  மிருபுறந் தழைத்த திருநிழ லிருக்க
மொருபரங் குன்ற மருவிய கூடற்
பெருநதிச் சடைமிசைச் சிறுமதி சூடிய
நாயகன் றிருவடி நண்ணலர் போலப்
பொய்பல புகன்று மெய்யொழித் தின்பம்
20
  விற்றுணுஞ் சேரி விடாதுறை யூர
னூருணி யொத்த பொதுவாய்த் தம்பல
நீயுங் குதட்டினை யாயிற் சேயாய்
நரம்பெடுத் துமிழும் பெருமுலைத் தீம்பாற்
குள்ளமுந் தொடாது விள்ளமு தொழுகுங்
25
  குதலைவாய் துடைப்பக் குளக்கடை யுணங்கியு
மண்ணுறு மணியெனப் பூழிமெய் வாய்த்தும்
பொலன்மணி விரித்த வுடைமணி யிழுக்கியுஞ்
சுட்டியுஞ் சிகையுஞ் சோர்ந்துகண் பனித்தும்
பறையுந் தேரும் பறிபட் டணங்கியு
  மறிக்கட் பிணாவின ரிழைக்குஞ் சிற்றிலிற்